இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா? நிச்சயம் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்க மாட்டாள்.

lakshmi

ஒரு வீட்டின் மகாலட்சுமி அம்சம் என்பது அந்த வீட்டில் இருக்கும் பணத்தை மட்டும் வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. வீட்டின் சந்தோஷம், மனநிம்மதி, அமைதி, நோய் நொடியற்ற வாழ்க்கை இப்படி அனைத்து விதமான நன்மைகளுடன் சேர்ந்து வரும் நிலையான வருமானத்தையே லட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். வீட்டில் கட்டுகட்டாக பணத்தை அடக்கி வைத்திருந்தால் மட்டும் மன நிம்மதியும், நிறைவான வாழ்க்கையும் கிடைத்துவிடாது. சில கெட்ட குணங்கள் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் நம்மிடம் எவ்வளவு தான் பணம் கொட்டி இருந்தாலும் அதனால் எந்த உபயோகமும் இருக்காது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். மனதில் கெட்ட எண்ணத்தோடு நம் வீட்டில் வைத்திருக்கும் பணம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதில் மகாலட்சுமியானவள் குடியிருக்க மாட்டாள் என்பது தான் உண்மை. கெட்ட எண்ணத்தோடு நாம் சம்பாதிக்கும் ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் அது, வெறும் காகிதத்தால் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் கஷ்டப்பட்டு உண்மையாக சம்பாதித்த கிழிந்த பத்து ரூபாய் நோட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இந்தப் பதிவின் மூலம் யார் கையில் இருக்கும் பணம் வெறும் காகிதம் என்பதையும், யார் கையில் இருக்கும் பணத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் என்பதையும் தெரிந்து கொள்வோமா.

mahalakshmi

முதலில் கர்வ குணம் படைத்தவர்களிடம் பணம் அதிகமாக இருந்தாலும் கூட அதனால் எந்தவிதமான நல்ல பிரயோஜனமும் இருக்கவே இருக்காது. கர்வகுணம் படைத்தவர்கள் எந்த ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டாலும் அலட்சியமாகவும், திமிருடன் செயல்படுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் செய்யும் செயலில் உள்ள தவறினை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டினால் கூட அதனை ஏற்கும் தன்மையானது அவர்களிடம் இருக்காது. குருட்டுப் போக்கில் பணத்தினை சம்பாதித்து, திமிரும் கர்வமும் சேர்ந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். கர்வ குணத்தோடு சம்பாதிக்கும் பணத்தில் நிச்சயம் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டாள் என்பது உறுதி.

அடுத்ததாக சுயநலம் அதிகம் உடையவர்களிடம் செல்வச் செழிப்பானது அதிவேகமாக உயர்ந்து கொண்டே சென்றாலும் அதில் எந்தவிதமான உபயோகமும் இருக்காது. நம்முடைய முன்னேற்றமானது நமக்கு மட்டும் இருக்கக்கூடாது. நம் அருகில் இருப்பவரையும் நம் முன்னேற்றத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரும் நன்றாக இருக்க வேண்டுமென்ற மனப்பான்மையோடு நாம் செயல்பட்டாலே போதும். சுயநலத்தோடு இல்லாமல் நம்முடைய வெற்றியில் அடுத்தவரையும் சேர்த்துக்கொண்டு, அவரையும்  கைதூக்கி விடும் குணம் என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை. சுயநலம் பார்க்காமல் மற்றவர்களுடைய நலத்தையும் பார்த்து பணம் சம்பாதிப்பவர்களிடம் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது குறிப்பிடத்தக்கது.

mahalakshmi

கோபம். கோபம் என்பது எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் எந்த நேரத்தில் எதற்காக கோபப் படுகின்றோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவர்களிடமும் மகாலட்சுமி நிச்சயம் தங்க மாட்டாள். அதாவது கோபம் கொள்பவர்கள் எதையும் நிதானமாக சிந்திக்க மாட்டார்கள். அவர்களது முடிவானது நிச்சயம் தவறாகத்தான் இருக்கும். கோபம் தணிந்த உடன் அவர்களை சிந்தித்து பார்ப்பார்கள் ‘கோபத்தில் நாம் தவறான முடிவை எடுத்து விட்டோமோ’ என்று, இதனால் கோபத்தை குறைத்துக் கொண்டு சிந்தித்து செயல் படுபவர்களிடம் மகாலட்சுமி நிச்சயம் நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

mahalakshmi

பெண்களைத்தான் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களை சில பேர் சிறு துரும்பாக கூட மதிப்பதில்லை. பெண்களை அவமானப் படுத்துபர்கள், தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள், பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள், இப்படி ஆண் கர்வம் படைத்தவர்களிடமும் நிச்சயம் மகாலட்சுமி குடியிருக்க மாட்டாள். உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை மட்டும் மதிப்பாக நடத்தினால் போதாது. அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்ற பெண்களையும் மதிப்போடு நடத்துவது மிகவும் உன்னதமானது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இதெல்லாம் இருந்தால் நிச்சயம் பணக் கஷ்டத்தோடு மன கஷ்டமும் இருக்கத்தான் செய்யும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi vasam seiyya Tamil. Mahalakshmi kadatcham Tamil. Mahalakshmi arul pera. Lakshmi kadatcham peruga Tamil.