சப்பாத்திக்கு தொட்டுக்க கெட்டியான ஒரு ‘பிளைன் கிரேவி’ சட்டென 15 நிமிஷத்துல எப்படி செய்றது? இந்த ரெசிபிய மிஸ் பண்ணாம தெரிஞ்சி வச்சுக்கோங்க.

garvy
- Advertisement -

வீட்டில் காய்கறி எதுவுமே இல்லாத சமயத்தில் வெறும் வெங்காயம் தக்காளியை வைத்து அசத்தலான ஒரு கிரேவி எப்படி செய்வது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மசாலா வாசம் நிறைந்த இந்த கிரேவி ரெசிபி சப்பாத்தி, ரொட்டி, இவைகளுக்கு செம சைட் டிஷ். இதை கெக்டி சால்னா என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இதனுடைய சுவை நம்முடைய நாவில் ஒட்டிக்கொள்ளும். சரி ரெசிப்பியை பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தக்காளி பழங்களை போட்டு விழுதாக அரைத்து, மிக்ஸி ஜாரில் இருந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக அதே மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு தேங்காய், 10 முந்திரி பருப்பு, சோம்பு – 1 ஸ்பூன் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக தேங்காய் அறைவையும் தனியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இவை அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது குருமாவை தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கிராம்பு – 4,  அன்னாசிப் பூ – 1, பட்டை – 2, பிரியாணி இலை – 1, சேர்த்து தாளித்து பெரிய சைஸில் 2 வெங்காயம் – நீளவாக்கில் வெட்டி அதை கடாயில் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக சிவக்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

tomato-chutney1

அடுத்தபடியாக இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், அரைத்து வைத்திருக்கும் தக்காளி, மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், வரமல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 சேர்த்து, ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விட்டு, அதன் பின்பு 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு கிரேவியை நன்றாக 10 நிமிடங்கள் வேகவிட வேண்டும். கிரேவியில் ஊற்றி இருக்கும் எண்ணெய் மேலே பிரிந்து வர வேண்டும். (இடையிடையே கிரேவியை திறந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.)

- Advertisement -

வெங்காயம் தக்காளி நன்றாக வெந்து குழைந்து இது கிரேவி பதத்திற்கு வந்தவுடன், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கிரேவியில் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்தால், அட்டகாசமான கிரேவி தயார். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி கொள்ளுங்கள். இந்த கிரேவி கொஞ்சம் கெட்டியாக தான் இருக்க வேண்டும். கிரேவிக்கு தண்ணீர் நிறைய ஊற்றி விடாதீர்கள்.

gravy8

இந்த கிரேவியை இட்லி தோசை சப்பாத்தி எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தா உங்க வீட்ல, இந்த சிம்பிளான கிரேவியை ட்ரை பண்ண மிஸ் பண்ணிடாதீங்க.

- Advertisement -