ஊட்டச்சத்து மிக்க தினையில் பாயாசம் செய்வது எப்படி

thinai payasam
- Advertisement -

அறுசுவை உணவுகளில் மிகவும் பிடித்தமான சுவை என்று பார்த்தால் அது இனிப்பு சுவைதான். எப்பேற்பட்ட சத்து மிகுந்த பொருளாக இருந்தாலும் அதை இனிப்பு சுவையுடன் செய்து தரும் பொழுது யாரும் அதை வேண்டாம் என்று ஒதுக்கவே மாட்டார்கள். அந்த வகையில் தினை அரிசியை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

தினையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இதில் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சினையை தடுக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • தினை – ஒரு கப்
  • பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 3 கப்
  • பால் – 2 கப்
  • வெல்லம் – 2 கப்
  • ஏலக்காய் – 2
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 5 ஸ்பூன்
  • முந்திரி – 10
  • திராட்சை – 8

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் தினை அரிசியை போட்டு வறுக்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். தினையின் நிறம் மாறிய பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் பாசிப்பருப்பை போட்டு அதையும் நன்றாக வறுத்து அரிசியுடன் கொட்டி ஆர வைக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக ஆரிய பிறகு தண்ணீரை ஊற்றி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு குக்கரை எடுத்து வைத்து அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் தினை மற்றும் பாசிப்பருப்பை போட்டு மூன்று கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடி விட வேண்டும். பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். குக்கரில் விசில் போன பிறகு குக்கரை திறந்து அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது பக்கத்தில் இருக்கும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தை போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்த பிறகு அதை வடிகட்டி பாயாசத்தில் ஊற்றி விட வேண்டும். பிறகு அதில் ஏலக்காயும், ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் துருவலை போட்டு சிறிதளவு நெய்யும் ஊற்றி நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த இந்த தேங்காய் துருவலை பாயாசத்தில் சேர்த்து விட வேண்டும். பிறகு மறுபடியும் நெய்யை ஊற்றி நெய் உருகியதும் முந்திரி, திராட்சை போன்றவற்றை போட்டு நன்றாக சிவக்க வறுத்து அதையும் பாயாசத்தில் ஊற்றி இறக்க வேண்டும். மிகவும் சுவையான ஆரோக்கியமான தினைபாயாசம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே:

சிறுதானியங்களை நம் உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான பல அற்புதமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது என்பதால் ஏதாவது ஒரு ரூபத்திலாவது நாம் நம்முடைய உணவில் சிறுதானியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -