வீட்டில் இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட சிந்தினால்! நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் தெரியுமா?

salt-rice-kumkum

அந்த காலம் முதல் நம் முன்னோர்கள், வீட்டில் சில பொருட்கள் தவறவிடுவதன் மூலம் சகுனம் பார்த்து வந்துள்ளனர். குங்குமம் கொட்டி விட்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழும் என்பார்கள். ஆனால் உண்மையில் குங்குமம் கொட்டினால் எந்த அசம்பாவிதமும் நிகழாது. எதற்காக பின்னர் அவ்வாறு சொல்லி வைத்தார்கள்? குங்குமம் தவறுவதும், மற்ற பொருட்கள் கைகளிலிருந்து தவறுவதும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதை குறிப்பதற்காக தான். என்ன குழப்பமாக இருக்கிறதா? சரி வாருங்கள், இந்த பதிவிற்குள் அதைப் பற்றிய தெளிவான அலசல்களை பார்த்து விடுவோம்.

kungumam

மேற்கூறிய உதாரணத்தையே இப்போது எடுத்துக் கொள்வோம். குங்குமம் தவறினால் அந்த நாளில் மனம் பதற்றம் கொள்கிறது. ஏதாவது கெட்டது நடக்குமா? கணவனுக்கு ஏதாவது ஆகி விடுமா? என்பது போன்ற பதைபதைப்பு உண்டாகிறது. குங்குமம் கொட்டுவது இயல்பான ஒன்று தான் என்றாலும் அவற்றில் இருக்கும் நன்மைகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்றைய நாளில் ஏதாவது ஒரு சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருந்திருக்கலாம். இவ்வாறு ஒரு சூழ்நிலை முன்கூட்டியே ஏற்பட்டதால், உங்களுடைய மனம் சண்டையிட கூடிய நிலையிலேயே இருக்காது. இப்படியாக எதை எடுத்தாலும் நாம் நேர்மறையாக நினைத்துக் கொள்வது தான் ஆன்மீகம்.

அது போல் வீட்டில் தண்ணீர் சிந்துவது, அரிசி கொட்டுவது, உப்பு தவறுவது போன்ற விஷயங்களும் வர இருக்கும் ஆபத்தை முன்கூட்டியே நமக்கு உணர்த்துவதற்காக தான் நடக்கிறது. தண்ணீர் சிந்தினால் கடன் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கிறது. சில வீடுகளில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். குழாய் சரி இல்லாமல் சொட்டு சொட்டாக தண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாம் கடன் பிரச்சினையை குறிக்கிறது.

tap

இப்படியான அறிகுறிகள் உங்கள் வீட்டில் தோன்றினால் நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை செய்யாமல் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கடன்களை வாங்கும் முன் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். அனாவசியமான கடன்களை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை தண்ணீரை சிந்துவதை வீட்டில் தவிர்ப்பது மிக மிக நல்லது.

- Advertisement -

அடுத்ததாக உப்பை சிந்துவது கூட அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். உப்பை சிந்தினால் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. தெரியாமல் உப்பை சிந்திவிட்டால் அன்றைய நாளில் நீங்கள் மௌனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. வர இருக்கும் சண்டை, சச்சரவுகளை தடுத்து நிறுத்துவதற்காக நிதானத்தை கையாள்வது மிகவும் நல்லது. தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் மனதை சரியான பாதையில் செல்ல விடாமல் தடுத்து விடும்.

salt

உப்பு சப்பில்லாத விஷயத்திற்கெல்லாம் கோபப்படக் கூடாது என்பதை தான் இந்த உப்பானது நமக்கு எடுத்துரைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கூடுமானவரை உப்பை கீழே சிந்துவதை தவிர்க்கவும். வீட்டில் உப்பு சிந்துவது நல்லதல்ல. அது போல் உப்பை கைகளால் எடுத்து சமையலில் சேர்ப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். உப்பை மட்டும் ஸ்பூன் பயன்படுத்தி சமையல் செய்யாதீர்கள். உங்களுடைய கைகளால் எடுத்து உப்பை தூவி அன்புடன் சமையல் செய்யுங்கள். அப்படி செய்தால் சமையல் ருசியாக மாறிவிடும்.

வீட்டில் அரிசி கொட்டுவதும் நல்ல சகுனம் அல்ல. அரிசியை சிந்த விடுவது தெய்வ குறைகளை குறிக்கிறது. நீங்கள் வேண்டிக் கொண்ட ஏதாவது ஒரு வேண்டுதல்கள் நிறைவேற்றாமல் போயிருக்கலாம். அதனை நினைவுபடுத்திக் கொள்வதற்கு இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இனி அரிசி சிந்தினால் கடவுளுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டும் மறக்காமல் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தெய்வ குறைகள் ஏற்படாமல் இருக்க அரிசியை அளக்கும் பொழுது எப்பொழுதும் கவனமாக இருங்கள். அரிசியை சிந்த விடுவது ஆபத்தானது என்கிறது சாஸ்திரம். இப்படியாக வீட்டில் சில பொருட்களை சிந்தாமல் பார்த்துக் கொள்வதும் நல்லது தான்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் இந்த 1 செயலை செய்தால் வீட்டில் நவகிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.