குழந்தைகளுக்கு முன்னால் இதை மட்டும் செஞ்சுடாதீங்க. அப்பறம் நீங்க தான் பீல் பண்ணுவீங்க

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் பெரியோர்கள். பிறக்கும்போது எல்லா குழந்தைகளும் ஏதும் அறியாமல் சம நிலையில் தான் பிறக்கிறார்கள். குழந்தைகள் பிறந்து பள்ளி செல்லும் வரை பெற்றோர்களின் தாக்கம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். பெற்றோர்கள் சொல்வதே அவர்களுக்கு வேத வாக்காக இருக்கும். என் பிள்ளை என்னை போல் பேசுகிறான், நடக்கிறான் என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதெல்லாம் பெரும்பாலும் அவர்களின் தாக்கத்தினால் வருபவையே. இப்படி பெற்றோர்களையே பார்த்து பார்த்து வளரும் குழந்தைகளுக்கு முன்னால் நாம் சிலவற்றை நிச்சயமாக தவிர்ப்பது நல்லது. அவற்றுள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Tamil boy baby names

முதலாவதாக, குழந்தைகளுக்கு முன்னால் பெற்றோர்கள் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி சண்டை போடும்போது, நம் அம்மா அப்பா எதற்காக சண்டை போடுகிறார்கள் என்று புரியாமல் குழந்தைகள் அழுவதும் அஞ்சுவதும் உண்டு. அது அவர்களுடைய மனதில் மிகப்பெரிய ஒரு அச்சத்தை உண்டாக்கும். அதே வேலையில் சண்டை போடும் பெற்றோர் அவர்களை மீறி சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தவுனார்கள். அத்தகைய வார்த்தைகளை குழந்தைகளும் கற்றுக்கொண்டு உங்களிடமே கூட பேசக்கூடும்.

அடுத்தபடியாக உங்களுடைய அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் குறித்து உங்களுக்கு எதாவது மனஸ்தாபம் இருந்தால் அதை குழந்தைகளுக்கு முன்பு வெளிப்படுத்த வேண்டாம். அப்படி வெளிப்படுத்தினால் அது அவர்களுடைய மனதில் பதிந்துவிடும். பிற்காலத்தில் நீங்கள் அதை மறந்தோ அல்லது மனதை மாற்றிக்கொண்டோ உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது அக்கம் பக்கத்தினரிடம் சககஜமாக பேசுவீர்கள். ஆனால் குழந்தைகள் அப்படி செய்ய கஷ்டப்படுவார்கள். அதே சமயத்தில் உங்கள் மேலும் கூட அவர்களுக்கு அருவெறுப்பு வர அது காரணமாக அமையும்.

Kanavan manaivi

அடுத்தபடியாக கணவன் மனைவி உறவு சம்மந்தமான விஷயங்களை குழந்தைகள் முன் அறவே பேசக்கூடாது. சிலர், குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லது விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நம்மை கவனிக்கவில்லை என்று எண்ணி சில சைகைகளை கணவனிடமோ மனைவியிடமோ காட்டுவதுண்டு. அப்படி செய்யப்படும் செயல்கள் நிச்சயம் குழந்தைகளின் கவனத்தை சிதறடித்து அவர்களை உங்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கும். அதோடு அவை குழந்தைகளின் மனநலத்திற்கும் நல்லதல்ல.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுடைய உடல் சார்ந்த நோய்களை பற்றி குழந்தைகள் முன் பேசாதீர்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை உண்டாக்கும். சில குழந்தைகள் இந்த அச்சத்தினால் எதிலும் கவனம் செலுத்த முடியாமலும் போகும்.

dna

அடுத்தபடியாக குழந்தைகளுக்கு முன்னால் வீண் செலவு செய்யாதீர்கள். அதன் மூலம் பணத்தின் அருமையை அவர்களால் புரிந்துகொள்ள முடியாதபடி நேரிடும். பிற்காலத்தில் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவி கொடுக்கும்.

money

புகை பிடித்தல், மது அருந்துதல், கடன் கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களை குந்தைகளுக்கு முன்னால் செய்யாதீர்கள். அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நாமே அப்படி செய்தால் அவர்கள் அதை மிக சர்வ சாதாரணமாக செய்ய வாய்ப்புகள் அதிகம் உண்டு.