வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் அதிஷ்டம் நிச்சயம்

mahalakshmil

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய நாளாகவே பார்க்கப்படுகிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். பல சிறப்புக்கள் மிக்க வெள்ளிக்கிழமை அன்று எதை எல்லாம் செய்தால் நம்மிடம் அதிஷ்டம் வந்து சேரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

Kaja Lakshmi with kuberar

குபேர விளக்கு என்றொரு விளக்கு கடைகளில் விற்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் அதில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.

வெள்ளிக் கிழமையில் வரும் சுக்கிர ஓரையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மகாலட்சுமி அஷ்டோத்திரம் கூறி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

mahalakshmi

வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது விஷேஷம். தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமைகளில் மாலை வேலையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர் சக்திகள் இருந்தால் விலகிவிடம். அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

sambrani

இதையும் படிக்கலாமே:
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்

அரசமரத்தடியில் வீற்று அருள்புரியும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். இதே போல அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் நல்லது.