திப்பிலி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

Thippili

நவீன மருத்துவம் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தது நமது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் ஆகும். இந்த இரண்டிலும் பெரும்பாலும் நமது நாட்டில் விளைகின்ற மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டன. அப்படியான மூலிகைகளில் ஒன்று தான் “திப்பிலி”. இந்த திப்பிலி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

thippili

திப்பிலி பயன்கள்

தொண்டை, குரல் வளம்
சளி, ஜலதோஷம் போன்றவற்றால் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பான குரல் ஏற்படுகிறது. இதனால் சரியாக பேச முடியாமல் போகிறது. திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு நீங்குவதோடு குரல் வளமும் மேம்பட செய்கிறது திப்பிலி.

மூலம்

மலச்சிக்கல், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்றவை ஏற்பதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலி பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். திப்பிலியை நன்கு பொடி செய்து, அதனுடன் குப்பைமேனி செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து திப்பிலி பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம் சீக்கிரம் குணமாகும்.

thippili

- Advertisement -

கல்லீரல், மண்ணீரல்

நமது உடலில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுகளை நீக்குவதும், தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற காரியங்களை கல்லீரல், மண்ணீரல் ஆகியவை செய்கின்றன. உடலில் அடிபடும் போதும், அதிக அழற்சியாலும் இந்த இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட உள்ளுருப்புகளின் வீக்கம் தீர தீப்பிலி பொடியை சாப்பிட்டு வருவதால் தீர்க்க முடியும்.

சுவாச நோய்கள்

ஆஸ்துமா, ப்ராங்கைட்டிஸ், மார்பு சளி போன்ற வியாதிகள் நமது நுரையீரலை பாதிப்பதாகும். இந்நோய்கள் வந்தால் சராசரியாக சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை தருகிறது. இத்தகைய நோய்கள் தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரத்திலேயே மார்பு நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும்.

thippili

காய்ச்சல்

உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறையும் போது ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. இச்சமயங்களில்
உடலுக்கு பலம் தரக்கூடியதும், நோய்களை போக்க கூடியதுமான பத்திய மருந்துகளை சாப்பிடுவதால் நோய் பாதிப்பிலிருந்து நீங்க முடியும். திப்பிலி, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிடுவதால் எப்படிப்பட்ட ஜுரம், காய்ச்சல் போன்றவையும் நீங்கும்.

மாதவிடாய்

மாதவிடாய் காலங்களில் பல பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரித்து அவர்களை உடலளவில் மிகுந்த பலவீனமானவர்கள் ஆக்குகிறது. இதற்கு தீர்வாக திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு சேர்த்து பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து மூன்று தினங்களுக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிகப்படியான மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கை கட்டுப்படுத்த முடியும்.

thippili

செரிமானமின்மை

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திப்பிலி அற்புதமாக குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திப்பிலி சிறப்பாக செயல்படுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது திப்பிலி ஆகும்.

இரத்தசோகை

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திப்பிலி பொடியை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

thippili

சர்க்கரை நோய்

உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திப்பிலி பொடி சாப்பிடுபவர்களுக்கு கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கிறது.

தலைவலி

சிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திப்பிலி பொடி பயன்படுகிறது. மிகுந்த காட்டமான தன்மை கொண்ட திப்பிலி போடி சாப்பிட சிறிது நேரத்திலேயே தலைவலி முற்றிலும் நீங்குகிறது.

இதையும் படிக்கலாமே:
7 முக ருத்ராட்சம் பலன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thippili benefits in Tamil. It is also called as Thippili payangal in Tamil or Thippili palangal in Tamil or Thippili maruthuva payangal in Tamil or Thippili nanamaigal in Tamil.