- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிரிவேணி சங்கமத்தில் குளித்த பலன் கிடைக்க பரிகாரம்

திரிவேணி சங்கமத்தில் குளித்த பலன் கிடைக்க பரிகாரம்

- Advertisement -

நாளைய தினம் பிப்ரவரி 13ஆம் தேதி, மாசி 1 பிறக்கவிருக்கிறது. மாசி மாதம் மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் இந்த நாளை, மாசி மகம் திருநாளாக கொண்டாடுவோம். இந்த நாளில் சிவன் வழிபாடு செய்வது, பெருமாள் வழிபாடு செய்வது, முன்னோர்களை வழிபாடு செய்வது, புனித நீராடுவது போன்றவை விசேஷமான வழிபாட்டு முறைகளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

தற்போது கும்பமேளாவும் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி கணக்கான மக்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்களுடைய பாவங்களை எல்லாம் கழித்து வருகிறார்கள். உங்களுக்கும் இந்த திருவேணி சங்கம்த்தில், புனித நதியில் நீராட வேண்டும் என்ற ஆசை இருந்தால், வீட்டில் இருந்தே நீங்கள் அந்த பாக்கியத்தை பெறலாம். நாளைய தினம் இந்த தீர்த்தத்தில் குளிப்பதன் மூலம். வீட்டிலிருந்தபடியே புனித தீர்த்தத்தில் நீராடுவதை பற்றிய விரிவான தகவல் ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

மாசி மகம் புனித தீர்த்த நீராடுதல்

தற்சமயம் அகமதாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டிருக்கிறது. பல செய்திகளில் பார்க்கின்றோம். கோடிக்கணக்கான மக்கள் பல ஊர்களில் இருந்தும் அந்த திருவிழாவுக்கு சென்று வருகிறார்கள். கங்கா யமுனா சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமிக்க கூடிய இடத்திற்கு சென்று புனித நீராடி முன்னோர்களை வழிபாடு செய்யக்கூடிய வைபவம் தான் இந்த கும்பமேளா.

நமக்கும் கும்பமேளாவிற்கு சென்று அந்த புனிதமான நதியில், நீராடிய பலன் நிச்சயம் கிடைக்கும். எப்படி தெரியுமா. நாளை மாசி மகம். நாளை காலையிலேயே கண் விழித்துக் கொள்ளுங்கள். சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. ஒரு பெரிய சொம்பில் வெதுவெதுப்பான சுடு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் மஞ்சள் பொடி அருகம்புல் பொடி, கிராம்பு பொடி, ஏலக்காய், இரண்டு துளசி இலைகள், கொஞ்சம் உதிரி புஷ்பங்களை போட்டு, இந்த தீர்த்தத்தை தயார் செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தூப தீபம் காட்டி அந்த மூன்று நதிகளையும் நாம் வணங்க வேண்டும். (தீபாவளியன்று குளிப்பதற்கு முன்பே சாமி கும்பிடுவோம் அல்லவா. அதேபோலத்தான் இந்த வழிபாடு.)

ஓம் கங்காதேவியே போற்றி போற்றி, ஓம் யமுனா தேவியே போற்றி போற்றி, ஓம் சரஸ்வதி தேவியே போற்றி போற்றி, என்று மூன்று முறை சொல்லுங்கள். மூன்று நதிகளின் தெய்வங்களும் உங்கள் முன்பு இருக்கும் தீர்த்தத்தில் வந்து ஐக்கியமாகி விடுவார்கள். பிறகு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சிவபெருமானையும் விஷ்ணு பகவானையும், பிரார்த்தனை செய்துகொண்டு, ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி கும்பமேளாவில் நடக்கும் திருவிழாவை உங்கள் மன கண்களில் காணுங்கள்.

- Advertisement -

நீங்களும் கும்ப மேலாவுக்கு சென்றதாக, மானசீகமாக கற்பனை செய்து கொண்டு, இந்த தீர்த்தத்தை கொண்டு போய் குளியல் அறையில் வைத்து, ஒரு சின்ன சொம்பில் இந்த தண்ணீரை எடுத்து உங்களுடைய தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த தீர்த்தத்தில் குளிக்கலாம்.

அதன் பிறகு எப்போதும் போல நீங்கள் சோப்பு போட்டு ஷாம்பு போட்டு குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து மீண்டும் குல தெய்வத்தை நமஸ்காரம் செய்து கொண்டு, உங்களுடைய வேலையை துவங்கலாம். இதை நாளைய தினம் செய்தாலே போதும். நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகி வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தை பௌர்ணமி குரு வழிபாடு

கும்பமேளாவிற்கு செல்ல முடியாதவர்கள் திருவேணி சங்கமத்தில் நீராட முடியாதவர்களுக்கு, இந்த பதிவு நிச்சயம் பயனுள்ளபடி அமையும். நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கையோடு நாளைய தினம் இந்த தீர்த்தத்தில் குளித்து, உங்கள் வாழ்க்கை பயணத்தை துவங்கி பாருங்கள். நிச்சயமாக தீராத கஷ்டங்கள் துன்பங்கள் நீங்கி, வீட்டில் சுப காரிய தடைகள் விலகி நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்