இந்த கோவில் விபூதியை பூசிக்கொண்ட மாத்திரத்தில் நோய்கள் பறந்தோடும்

murugan-6

இந்துக்களில் பெரும்பாலானோர் நெற்றியில் சந்தனம், குங்குமம், விபூதி போன்றவற்றை இட்டுக்கொள்வது வழக்கம். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்களும் உண்டு. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரப்படும் விபூதிக்கு சக்தி அகிகம் என்று கூறப்படுகிறது.

Tiruchendur

மற்ற கோவில்களில் தரப்படும் விபூதி போல் அல்லாமல் இங்கு பன்னீர் இலையில் வைத்து விஷேஷ விபூதி பிரசாதம் தரப்படுகிறது. ஒரு சமயம் விசுவாமித்திர முனிவர் தன் உடலின் ஏற்பட்ட பிணியை நீக்கும் பொருட்டு திருச்செந்தூருக்கு வந்து இலை விபூதி பிரசாதத்தை வாங்கி அதை தரித்துக்கொண்டார். அதன் காரணமாக அவர் உடலில் இருந்த அனைத்து நோய்களும் விலகி ஓடியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இலை விபூதி பிரசாதம் குறித்து ஆதிசங்கரர் கூறுகையில், குஷ்டம், வலிப்பு, குன்மம், ஷயம், நீரழிவு, முதலிய கொடிய நோய்கள் அனைத்தும் இந்த விபூதியை பூசிக்கொண்டு மாத்திரத்தில் பறந்தோடும் என்கிறார். இப்படி பல சிறப்புக்கள் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதியை நீங்களும் தரித்து அருளோடும் ஆரோக்கியத்தோடும் வாழுங்கள்.