இந்த கோவிலில் விளக்கேற்றினால் பெருமாள் வீட்டிற்கு வருவார் தெரியுமா ?

Perumal

பொதுவாக நாம் கோவிலுக்கு செல்கையில் நெய் விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் திருக்கோட்டியூர் என்னும் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நம் விளக்கேற்றினால் நமது வாழ்வில் உள்ள குறைகள் நீங்குவது திண்ணம். 108 திவ்யதேசங்களுள் ஒன்றான இந்த கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவானது பெரிதும் விசேஷமானது. அந்த சமயத்தில் இங்கு விளக்கு பிராத்தனை என்றொரு பிராத்தனை நடைபெறுவது வழக்கம்.

vilakku

மற்ற கோவில்களில் எல்லாம் நாம் விளக்கேற்றிவிட்டு அந்த விளக்கை கோவிலிலேயே விட்டுவிட்டு வந்து விடுவோம். ஆனால் இங்கு அப்படி அல்ல. நாம் ஏற்றிய விளக்கை கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். விளக்கேற்றுகையில் பெருமாளிடம் ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்து அதை நிறைவேற்றி வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு தெப்பக்குளத்தை சுற்றி இங்கு பலர் இரு விளக்குகளை ஏற்றுகின்றனர்.

அப்படி ஏற்றப்படும் விலக்கானது எரிந்து முடிந்த உடன் அந்த விளக்கினை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். அந்த விலகி வீட்டின் பூஜை அறையில் வைத்து பிராத்தனை நிறைவேறும் வரை அதை தினமும் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றுகையில் விளக்கில் ஒளி வடிவில் பெருமாள் வந்து நமக்கு அருள்புரிந்து நமது பிராத்தனைகளை நிறைவேற்ற செய்வார் என்பது ஐதீகம்.

Thirukotiyur temple

பிராத்தனை நிறைவடைந்ததும் மீண்டு அடுத்த வருடம் தெப்போற்சவத்துக்கு வந்து பழைய விளக்கோடு சேர்த்து 5, 7, 9 என்ற எண்ணிகையில் பல விளக்குகளை பக்தர்கள் ஏற்றி பெருமாளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இந்த பிராத்தனையை பெரும்பாலானோர் தெப்போற்சவம் சமயத்தில் தான் பலரும் செய்கின்றனர். ஆனாலும் இதை மற்ற நாட்களிலும் செய்யலாம். அப்படி செய்ய நினைப்போர் அங்குள்ள பட்டாச்சார்யரிடம் சொல்லி சரியான முறையை அறிந்து விளக்கேற்றுவது நல்லது.

- Advertisement -

DEEPAM

பெருமாளின் நட்சத்திரம் திருவோணம் என்றாலும் இங்கு சித்திரை மாதத்தில் ஆதி பிரமோட்சவம் நடக்கிறது. இதற்க்கு காரணம் இங்கு சித்திரை நட்சத்திரத்தில் தான் பெருமாள் எழுந்தருளி உள்ளார். இந்திரனால் பூஜிக்கப்பட்ட இந்த பெருமாள் கதம்ப மகரிஷிக்கு அருள்பஅளிக்க இங்கு வந்ததாக கூறப்படுகிறது. பல சிறப்புகள் மிக்க இந்த பெருமாளை நாமும் வணங்குவோம் நம்முடைய குறைகள் தீர விளக்கேற்றி அவரிடம் பிராத்திப்போம்.

இதையும் படிக்கலாமே :
திருப்பதியில் உள்ள ரகசிய தங்க கிணறு பற்றி தெரியுமா ?

English overview:
There is a specialty in Thirukotiur Perumal temple that if some lighten oil lamp then he is permitted to take that to his home. while lightening the oil lamp if we pray then Lord Perumal will bless us. This is the belief here.