திருமண தோஷம் நீங்க மிக எளிய பரிகாரம்

Thirumanam kaikuda

ஒரு ஆண் ஒரு பெண் ஆகிய இருவரும், பெரியோர்கள் ஆசிர்வாதத்தோடு இல்லற வாழ்வில் இணையும் சடங்கு திருமணம். சரியான காலத்தில் இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் செய்து விடவே அனைவரும் விரும்புவர். ஆனால் சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

marriage

ஜோதிடத்தில் பல சுகங்களுக்கு காரகனாகவும், இல்லற வாழ்வில் ஆண்-பெண் இணைவிற்கு முக்கிய பங்கு வகிக்கும் கிரகமாக “சுக்கிரன்” இருக்கிறார். இந்த சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் “கடகம், சிம்மம், கன்னி” போன்ற சுக்கிரன் “பகை மற்றும் நீச்சம்” பெறும் ராசிகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு சுக்கிரனால் “திருமண தோஷம்” ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு பித்ரு சாபங்களினாலும் திருமண தோஷம் ஏற்படுகிறது. இந்த திருமணம் தோஷம் நீங்கி சிறந்த வரன் மற்றும் வது உடன் திருமணம் நடக்க கீழ்கண்ட பரிகாரங்களை செய்யலாம்.

திருமண தோஷம் பரிகாரம்

திருமண தோஷம் கொண்ட பெண்கள் தங்கள் ரத்த வழி உறவுகளில், பூப்படையாத 10 -12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை உங்கள் வீட்டிற்கு ஒரு வியாழக்கிழமை அன்று வரவழைத்து சைவ உணவு விருந்து அளிக்க வேண்டும். விருந்து உண்டு முடித்ததும் சந்தனம், குங்குமம், மஞ்சள் நிற ஜாக்கெட் துணி, ஐந்து மஞ்சள் கிழங்கு, மூன்று முழம் மல்லி பூ, கண்ணாடி வளையல்கள், அதனுடன் நீங்கள் விரும்பும் தொகையை காணிக்கையாக ஒரு புது தட்டில் வைத்து, அப்பெண் குழந்தையை கிழக்கு திசை பார்த்தவாறு நிற்கச் சொல்லி கொடுக்க வேண்டும்(தட்டை திருப்பி வாங்கி கொள்ள கூடாது). இவ்வாறு செய்த மூன்று மாத காலத்திற்குள் திருமண தோஷம் விலகி திருமண முயற்சிகள் வெற்றி பெரும்.

marriage

திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.

- Advertisement -

Thirumanancheri temple

கும்பகோணத்திற்கு அருகே இருக்கும் “திருமணஞ்சேரி” என்ற கோவிலுக்கு சென்று அக்கோவிலின் இறைவனான சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வணங்கி, அக்கோயிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை முடிக்க, 90 நாட்களுக்குள் திருமணம் தோஷம் கொண்ட ஆண்களுக்கும், பெண்களும் அத்தோஷங்கள் நீங்கி சிறப்பான திருமண சம்பந்தம் அமையும்.

இதையும் படிக்கலாமே:
15,000 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோவிலின் முழு விவரம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thirumana dosha pariharam in Tamil. Kalyanam nadaka pariharam in Tamil or Thirumanam aga pariharam in Tamil.