15,000 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோவிலின் முழு விவரம்

Vellore golden temple

பலரும் கோவிலுக்கு செல்வது அங்கிருக்கும் இறைவனை வணங்கி அவனது செயலாற்றலை எண்ணி அதிசயிக்கத்தான். ஆனால் நம் நாட்டில் இருக்கும் சில வழிபாட்டு தங்களை கண்டாலே போதும் அதுவே அதிசயிக்கும் வண்ணம் இருக்கும். அப்படி தங்கத்தால் ஆன “தங்க கோவில்” கோவில் தான் வேலூர் மாவட்டம் “ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி கோவில்”. இக்கோவிலை பற்றி இங்கு சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

Golden Temple Vellore

வேலூர் தங்க கோவில் தல வரலாறு

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபுரம் என்ற இந்த பகுதியில் சுயம்புவாக ஸ்ரீ நாராயணி தேவியின் சிலை தோன்றியதாகவும், அப்போது அச்சிலையை சுற்றி ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் இத்தல வரலாறை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாராயணி உபாசகர் ஒருவர், நாராயணி தேவிக்கு தங்கத்தால் ஆன கோவிலை கட்டும் விருப்பம் மேலிட்டு அவரது முயற்சியால் “15000 கிலோ தங்கத்தை” பயன்படுத்தி கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

தல சிறப்பு

இக்கோவிலின் விஷேஷ அம்சமாக கோவிலின் தெய்வமாக “நாராயணி தேவி” சுயம்புவாக இருப்பதாகும். இந்த கோவிலின் அனைத்து பகுதிகளுமே முழுக்க சுத்த தங்கத்தால் ஆன முலாம் மற்றும் தகடுகள் பொருத்தி செய்யப்பட்டதாகும். இந்த தங்க கோவிலின் வெளிப்பிரகாரம் வானிலிருந்து பார்க்கும் போது பெருமாளின் “சுதர்சன” சக்கரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் அளவு கொண்ட இந்த பிரகாரத்தை பக்தர்கள் சுற்றிவந்து இக்கோவிலின் மைய மண்டபத்தில் நுழையும் முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு 16 பேறுகளை நாராயணி தாயார் வழங்குவதாக கருதப்படுகிறது. வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.

Golden Temple Vellore

- Advertisement -

கோவில் அமைவிடம்

ஸ்ரீ லட்சுமி நாராயணி திருக்கோவில் வேலூர் மாவட்டத்தில், திருமலைக்கோடி என்னும் ஊரில் ஸ்ரீபுரம் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.

Golden Temple Vellore

அணிந்து செல்லவேண்டிய ஆடைகள்: சீரான எவ்வித ஆடையையும் அணிந்து செல்லலாம். அணிந்து போன்ற ஆடைகள் அனைத்து செல்ல கூடாது.

நுழைவு கட்டணம்: இங்கு இலவச தரசினமும் கட்டண தரிசனம் உண்டு. கட்டண தரிசனத்திற்கு 250 ருபாய் செலுத்த வேண்டும்.

Golden temple

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

கோவில் முகவரி

ஸ்ரீ நாராயணி பீடம்,
ஸ்ரீபுரம்,
திருமலைக்கோடி,
வேலூர் 632055

தொலைபேசி எண்

416 2271855
416 227 1202

இதையும் படிக்கலாமே:
அரசு வேலை கிடைக்க வழிபாடு

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have golden temple details in Tamil. Golden temple in Vellore is very famous. We have golden temple Vellore timings, golden temple Vellore history in Tamil, Golden temple Vellore god name, golden temple Vellore address, golden temple Vellore dress code, golden temple Vellore contact number and much more details about Vellore thanga kovil. thanga kovil varalaru, timings, photos and complete details are here.