குலதெய்வத்தை இந்த நாளில் சென்று வழிபட்டால் திருமணத்தில் இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.

kuladheivam marriage
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திருமணம் சரியான வயதில் நடைபெற்றால் தான் அதற்கு மரியாதை இருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் பலரும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த சூழ்நிலையில் நாம் பல பரிகாரங்களை செய்வோம். இருப்பினும் குலதெய்வத்தின் அருளோடு திருமணம் நடக்க வேண்டும் என்றால் எந்த நாளில் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய நன்மைகள் அனைத்திற்கும் குலதெய்வத்தின் அருள் கண்டிப்பான முறையில் தேவைப்படுகிறது. ஆதலால் தான் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வத்தை சென்று வணங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த வகையில் திருமண தடையை விலக்குவதற்கு குலதெய்வ வழிபாட்டை பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

திருமணம் தடைப்பட்டிருக்கும் நபர் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அவ்வாறு அவர்களால் செய்ய இயலாத பட்சத்தில் அவர்களின் பெற்றோர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமணம் நடைபெற வேண்டிய நபரின் பிறந்த நட்சத்திர நாள் அன்று அதுவும் வளர்பிறையாக இருக்க வேண்டும். அந்த நாளில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது திருமாங்கல்ய செட் என்று அனைத்து கடைகளிலும் விற்கப்படும் செட்டை வாங்கிக்கொண்டு போக வேண்டும். உங்களால் இயன்ற அளவு எண்ணிக்கையில் 11, 21 என்ற எண்ணிக்கையில் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறை இருக்கும். அந்த வழிபாட்டை நாம் முறையாக மேற்கொள்ள வேண்டும். கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு அந்த மாங்கல்ய செட்டை வழங்க வேண்டும். முதலில் வழங்கும் நபர் தம்பதி சமீதமாக வயதில் மூத்தவராக இருப்பவராக பார்த்துக் கொடுக்க வேண்டும். பிறகு அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு அந்த கோவிலுக்கு வரும் அனைத்து சுமங்கலி பெண்களுக்கும் நாம் வாங்கி வந்த மாங்கல்ய செட்டை தர வேண்டும். ஒன்றை மட்டும் திரும்பவும் நம் வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 இருந்து 16 நட்சத்திர நாளில் சென்று வழிபாடு மேற்கொண்டு வர வேண்டும். 16 வது வாரம் ஏதாவது ஒரு பிரசாதத்தை வீட்டிலிருந்து செய்து கோவிலுக்கு வரும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் செய்யும் வியாபாரத்தில் லட்ச லட்சமாக லாபத்தை பார்க்க ஆசையா இருக்கா. அப்ப ஒரே ஒரு கொட்டை பாக்கை திங்கட்கிழமை உங்கள் கடைக்குள் இப்படி வையுங்க போதும்.

இவ்வாறு நாம் செய்து வருவதன் மூலம் திருமணத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி திருமணம் விரைவில் கைகூடும்.

- Advertisement -