திருமண தடை நீங்குவதற்கு நவதானியத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்து பாருங்கள். விரைவிலேயே திருமணம் கைகூடும்.

navathaniya pariharam
- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம் நடைபெற்று தனக்கென்று ஒரு குடும்பம் வந்தால்தான் அவர்களுடைய பொறுப்பு என்பது அவர்களால் உணரப்படுகிறது என்று தான் கூறவேண்டும். அப்படிப்பட்ட திருமணத்தை பெற்றோர்கள் பார்த்து செய்வதாக இருந்தாலும் காதல் திருமணம் ஆக இருந்தாலும் அதற்கு என்று நேரம் வந்தால் தான் நடைபெறும். இருப்பினும் சிலருக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகளோ தடங்கல்களோ ஏற்பட்டு இந்த திருமண வாழ்க்கை என்பது தள்ளிக் கொண்டு போகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் திருமண தடையை விளக்குவதற்கு நவதானியத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவார்கள். அந்த திருமணத்தை நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். ஆனால் அது ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்பட்டோ இல்லை தடங்கல்கள் ஏற்பட்டோ காலதாமதம் ஆகி பலருக்கும் திருமணம் நடக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு ஜாதக ரீதியாக தோஷங்கள் இருந்தாலும் நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக கிடைக்காதது தான் முழு முதல் காரணமாக திகழ்கிறது.

- Advertisement -

அப்படி நவகிரகங்களின் அருளை பெறுவதற்காக செய்யக்கூடிய எளிய பரிகாரத்தை பார்ப்போம். இந்த பரிகாரத்தை நாம் வியாழக்கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும் செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று புதிதாக ஒரு துணியை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக துவைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணி வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கலாம்.

நாட்டு மருந்து கடைகளில் நவ தானியம் என்று கிடைக்கும் அதை வாங்கிக்கொண்டு அந்த புதிய துணியில் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். திருமணம் தடைப்பட்டு இருக்கும் நபர்கள் அன்றிரவு அதை அவர்களுடைய தலையணைக்கு கீழ் வைத்து உறங்க வேண்டும். அவ்வாறு உறங்கச் செல்வதற்கு முன்பு தனக்கு நல்லபடியாக விரைவிலேயே திருமணம் நடைபெற வேண்டும் மற்றும் திருமண தடைகளை நீக்கி அருள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு உறங்க வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து அந்த நவதானியங்களை பொடியாக அரைத்து அதனுடன் வெள்ளம் சேர்த்து அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு தங்கள் கைகளாலேயே தானமாக வழங்கி விட வேண்டும். இதை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். இவ்வாறு தானம் வழங்கிய பிறகு குலதெய்வ கோயில் அருகில் இருக்கும் நபர்கள் குலதெய்வத்தை சென்று வழிபட்டு வர வேண்டும். இயலாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் என்றென்றைக்கும் ஐஸ்வரியம் நிலைத்து இருக்க இரவு படுக்கும் முன் அடுப்பின் மீது இதை வைத்து விடுங்கள்.

இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் நவகிரகங்களின் அருளும், குலதெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைத்து தடைப்பட்டிருக்கும் திருமணம் விரைவில் நடைபெறும்.

- Advertisement -