திருமண வாழ்வில் உங்களுக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா ?

astrology

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாக பல பொருத்தங்களை பார்த்து திருமணம் செய்விக்கும் போது ராசி பொருத்தத்தையும் பார்ப்பார்கள். அப்படி ஜோதிடத்தில் உள்ள 12 ராசியினருக்கும் எந்தெந்த ராசி அவர்களின் திருமண வாழ்விற்கு சற்று ஒத்துப்போகாத ராசிகள் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

மேஷம்:

Mesham Rasiமேஷ ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் ரிஷப ராசியினர் ஆவார்கள். மேஷ ராசியினரின் வேகமான சிந்தனையும், செயல்பாடுகளும் மெதுவான சுகமான வாழ்க்கை வாழும் கொள்கை கொண்ட ரிஷப ராசியினருடன் பொருந்தமாட்டார்கள். எனவே திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் இந்த இரு ராசியினருக்கும் இணைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ரிஷபம்:

Rishabam Rasiரிஷப ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் தனுசு ராசியினர். வாழ்வில் எதிலும் ஒரு ஒழுக்கம் மற்றும் நேர்மறையான செயல்பாடுகளை விரும்பும் இந்த ராசியினருடன், சுதந்திர உணர்வும் யாருக்கும் எளிதில் அடங்கிப்போகாத தன்மை கொண்ட தனுசு ராசியினருடன் திருமணம் செய்வது, அவர்கள் வாழ்வில் அவ்வப்போது கருத்துவேறுபாடுகளையும், விவாதங்களையும் உருவாக்கும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamமிதுன ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மகர ராசியினர். வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியையும், நகைச்சுவைத்தன்மையையும் விரும்பும் இந்த ராசியினருடன் எதற்கும் வளைந்து கொடுக்காத மற்றும் திட்டமிட்டு வாழ்க்கையை வாழும் மகர ராசியினருடன் திருமணம் செய்வது இருவருக்குமே பல நேரங்களில் மன வருத்தங்களை கொடுக்கும்.

கடகம்:

Kadagam Rasiகடக ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் கும்ப ராசியினர் ஆவார்கள். வாழ்க்கையை எப்போதும் சுகமாக வாழ நினைக்கும் நீங்கள் அதிகம் கனவுலகில் வாழ்வீர்கள். ஆனால் எதார்த்த உலகின் உண்மைகளை நன்கு உணர்ந்த கும்ப ராசியினர் அதற்கேற்றவாறு வாழ பிறரை வலியுறுத்துவார்கள். ஆகவே இந்த இரு ராசியினருக்கும் திருமணம் செய்கையில் அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மனக்குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்.

சிம்மம்:

simmamசிம்ம ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுவது விருச்சிக ராசியினர் எப்போதும் எதற்கும் அஞ்சாமல், வளைந்து கொடுக்காமல் வாழும் உங்களுடன், அறிவுத்திறன் மற்றும் சிந்தனை ஆற்றல் அதிகம் கொண்ட விருச்சிக ராசியினர் ஏதாவது ஒருவகையில் விவாதங்களில் ஈடுபடக்கூடும். எனவே இந்த இரு ராசிக்கும் இடையே திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

கன்னி:

Kanni Rasiகன்னி ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினாராக கருதப்படுபவர்கள் தனுசு ராசிக்காரர்களே. வாழ்வில் எதிலும் ஒரு கலைநயம் மற்றும் கவித்துவத்தை விரும்பும் உங்களுக்கும் பிறரின் உணர்வுகளை அவ்வளவு எளிதாக உணர முடியாத தனுஷுக்கு ரசிகர்களுக்கும் பொருந்தாது. எனவே இந்த இரு ராசிக்கும் இடையே திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

துலாம்:

Thulam Rasiதுலா ராசியினருக்கு ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் கன்னி ராசியினர் ஆவார்கள். எப்போதும் பிறருடன் உண்மையாக பழகும் நீங்கள், தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை மற்றும் கொள்கை இருப்பதை விரும்பும் கன்னி ராசியினருடன் திருமண வாழ்வில் இணைந்தால் ஏதாவது ஒரு விவாதங்கள் அடிக்கடி நிகழும் நிலை ஏற்படும்.

விருச்சிகம்:

virichigamவிருச்சிக ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் மகர ராயினர்கள் ஆவார்கள். எப்போதும் எதிலும் கடினமான விதிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உங்களுடன் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் எதிர் வாதம் புரியும் மேஷ ராசியினருடன் எப்போதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக வாக்குவாதங்கள் ஏற்படலாம் எனவே இந்த இரு ராசியினருக்குமிடையே திருமணம் செய்வதை தவிர்ப்பது நலம்.

தனுசு:

Dhanusu Rasiதனுசு ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியாக கருதப்படுபவர்கள் ரிஷப ராசியினர்கள் ஆவார்கள். பிறர் மதிப்பையும, மரியாதையையும் விரும்பி எப்போதும் ஒரு வளையா தன்மையைக் கொண்டிருக்கும் நீங்கள், வாழ்க்கையை மகிழ்வுடன் சிரித்து வாழ விரும்பும் ரிஷப ராசியினருடன் திருமண வாழ்வில் இணைவது சரியாக இருக்காது.

மகரம்:

Magaram rasiமகர ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மிதுன ராசியினர் ஆவார்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் காணும் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் உறுதுணையாக உங்கள் வாழ்க்கை துணை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நீங்கள். எப்போதும் ஒரு கட்டுக்கோப்போடு, எதார்த்த உலகில் வாழும் மிதுன ராசியினருடன் உங்கள் திருமண வாழ்வானது எப்போதும் ஒரு வித மனக்கசப்பை ஏற்படுத்திகொடே இருக்கும்.

கும்பம்:

Kumbam Rasiகும்ப ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் கடக ராசியினர் ஆவார்கள். எல்லோரிடமும் விசுவாசம் மற்றும் உணர்வை எதிர்பார்க்கும் நீங்கள் வாழ்க்கையில் எதற்கும், யாரைப் பற்றியும் கவலைப்படாத குணம் கொண்ட கடக ராசியினருடன் திருமண வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது ஒரு போராட்டமான வாழ்க்கையையே கொடுக்கும்.

மீனம்:

meenamமீன ராசியினருடன் ஒத்துப்போகாத ராசியினராக கருதப்படுபவர்கள் மிதுன ராசியினர் ஆவார்கள். வாழ்வில் காதல் உணர்வும் பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை அதிகம் கொண்ட உங்களுடன், அறிவாற்றல் மிக்க, எதையும் விமர்சிக்கும் தன்மை கொண்ட மிதுன ராசியினருடன் திருமண வாழ்வில் ஈடுபட்டால் இருவரும் அடிக்கடி மனஸ்தாபங்களால் வருந்தும் நிலை ஏற்படலாம்.