30 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை என்றால், அதற்கு இப்படி ஒரு காரணம் உள்ளதா? எப்படிப்பட்ட திருமண தடையை போக்கும் சுலபமான பரிகாரம் உங்களுக்காக!

marriage

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டு சென்றாலும், ஜாதகத்தால் தோஷத்தால் பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் வருகின்றது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருப்பதும் ஒரு பிரச்சனை. எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டாமா? சரி, உங்களுடைய ஜாதக கட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்க முடியும் என்று சிந்திப்பவர்களுக்கு தெளிவான விளக்கத்தை தரக்கூடிய பதிவு தான் இது.

Marriage

ஒரு சிலருக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும். அது என்ன காரணம் என்றால், உங்களுடைய குடும்பத்தில், உங்களுடைய வம்சாவழியில் உங்களது முன்னோர்களோ அல்லது நீங்களோ அடுத்தவர்களின் சொத்தை அனுபவித்தால், அந்த சொத்தை நீங்கள் ஆண்டு அனுபவித்து வந்தால், உங்களுடைய வம்சத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது உடன் பிறந்தவர்களுடைய சொத்தையும் சேர்த்து ஒருவரை அனுபவிப்பார்கள். உடன்பிறந்தவர்களுக்கோ, பங்காளிகளுக்கோ சொத்தை பிரித்து கொடுத்திருக்க மாட்டார்கள். இரண்டாவதாக வாரிசு இல்லாத சொத்தை அனுபவிப்பவர்களாக இருந்தாலும், அவர்களுடைய வாரிசுக்கு திருமணம் தடைப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல் கோயில் சொத்தை அபகரிப்பவர்கள் வாரிசுகளுக்கும் திருமணம் தடைபடும். ஆக இப்படிப்பட்ட தவறினை நீங்களோ உங்களது முன் சந்ததியினரோ செய்து இருந்தால், நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் வாரிசுக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். இப்படிப்பட்ட சிக்கலை சுலபமான வழியில் தீர்ப்பதற்கு பரிகாரமும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு செவ்வாய் கிழமையில் முருகன் கோவிலுக்கு சென்று 11 நெய் தீபங்கள் ஏற்றி, அங்கு உள்ள குருக்களுக்கு உங்களால் முடிந்த உளுந்தை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அந்த முருகப்பெருமானுக்கு நீர் மோரை நிவேதனமாக வைத்து முருகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டு, அந்த நீர் மோரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். இது ஒரு பரிகாரம்.

இரண்டாவதாக உங்களுக்கு பிரச்சினை எதில் உள்ளது என்பதே புரியவில்லை, ஆனால் திருமணம் மட்டும் தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது. வயது கடந்து கொண்டே செல்கிறது எனும் பட்சத்தில், சித்திரகுப்தர் சன்னிதானம் உள்ள கோவிலுக்கு சென்று, சித்திரகுப்தருக்கு ஒரு வெள்ளிக்கிழமை அன்று பாலபிஷேகம் செய்ய வேண்டும். பால் அபிஷேகத்தோடு சேர்த்து 7 விதமான பிரசாதங்களை நிவேதனமாக செய்து வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதோடு 7 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்(மஞ்சள் கிழங்கு ஓடு சேர்த்த தாம்பூலம். வெற்றிலை பாக்கு, பூ, வாழை பழம், மஞ்சள் கிழங்கு). 7 பசுமாட்டிற்கு உங்களால் முடிந்த உணவை தானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அட! காலையில் எழுந்து பல் துலக்குவதில் இத்தனை இரகசியங்கள் ஒளிந்துள்ளதா? உங்களது வாய்ப் பேச்சால் தான், வாழ்க்கையில் பிரச்சனை வருகிறதா? நீங்கள் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.