திருமணம் நடக்க ஹனுமன் வழிபாடு

hanuman1
- Advertisement -

சில பேருக்கு எல்லாம் ஜாதக கட்டத்திலேயே திருமண தடை பெரிய அளவில் இருக்கும். ஜாதக கட்டத்தில் இருக்கும் தடையை உடைக்க எவ்வளவோ ஜோதிடரை பார்த்து எவ்வளவோ பரிகாரங்கள் செய்திருப்பார்கள். ஆனால் திருமணம் கைகூடி வராது. தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மையான பக்தியும், வழிபாட்டு முறையும் எவ்வளவு மோசமான தலைவிதியாக இருந்தாலும், அதை நல்லபடியாக மாற்றி எழுதும் வல்லமை கொண்டது.

ஆமாங்க, நம்பிக்கையோடு நீங்கள் சாமி கும்பிட்டீங்கன்னா, விதியை வெல்லலாம். தலையெழுத்தை மாற்றலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது நிச்சயம் புரியும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் திருமணம் நடக்கவே நடக்காது என்று எழுதியிருந்தால் கூட பரவாயில்லை. ஹனுமனை ஒரு முறை இப்படி கும்பிட்டு பாருங்க. நிச்சயமாக நல்லபடியாக உங்களுக்கு திருமண நடக்கும்.

- Advertisement -

40 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் காத்துக் கொண்டிருக்கும் ஆண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். திருமண வயதை கடந்து திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

வீட்டு பக்கத்தில் இருக்கும் எந்த ஹனுமன் கோவிலிலும் இதை செய்யலாம். தவறு கிடையாது. ஆஞ்சநேயர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் என்றால் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றும் இந்த வழிபாட்டை செய்வதும் சிறப்பான பலனை தரும்.

- Advertisement -

அனுமனுக்கு உங்களுடைய செலவில் சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். சுத்தமான சந்தனத்தை வாங்கி கொடுத்து அபிஷேகத்திற்கு பயன்படுத்த வேண்டும். பிறகு மல்லிகை பூவால் கட்டப்பட்ட மாலையை அனுமனுக்கு சாத்தி வழிபாடு செய்யவும். பிரசாதமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை அனுமனுக்கு வாங்கி நிவேதனம் வைக்கணும். கல்கண்டு அல்லது லட்டு, பூந்தி இப்படி ஏதோ ஒரு நைவேத்தியம் அது உங்களுடைய விருப்பம்.

இப்படி கோவிலில் அனுமனுக்கு சந்தன அபிஷேகம் செய்து, மல்லிகை பூ மாலையை போட்டு, இனிப்பு நெய்வேதியம் பண்ணி, அந்த நெய்வேத்தியத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விட வேண்டும். இப்படி வழிபாடு செய்யும்போது சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து ஹனுமனிடம் உங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டும். உங்களுக்கு பிறந்த நட்சத்திரம் தெரியாது எனும் பட்சத்தில் சுவாதி நட்சத்திரம் அன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மாதத்தில் ஒரு நாள் அந்த சுவாதி நட்சத்திரம் என்று வருது என்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கிருத்திகை நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு

இந்த பரிகாரத்தை அனுமனுக்கு ஒரு முறை செய்தாலே போதும். பிறகு அடுத்தடுத்த நாளிலிருந்து அனுமன் சன்னிதானத்திற்கு சென்று அனுமனை மூன்று முறை வளம் வந்து அனுமனிடம் மனம் உருகி பிரார்த்தனை வையுங்க போதும். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -