தாய் அணிந்திருந்த இந்த நகையை மட்டும் ஒருபோதும், மகள் எடுத்துக் கொள்ளவும் கூடாது. அணிந்து கொள்ளவும் கூடாது.

women4
- Advertisement -

அம்மா சொத்து என்றால் அது பெண் குழந்தைகளுக்குத்தான் வந்து சேர வேண்டும். இதை காலம்காலமாக நாம் பின்பற்றி வருகின்றோம். அம்மா அணிந்திருந்த நகையாக இருக்கட்டும், அம்மா பயன்படுத்திய உடைகள் ஆக இருந்தாலும், அதை அந்த தாயின் மறைவிற்கு பிறகு அவர்களுடைய பெண் வாரிசுகள் எடுத்துக் கொள்ளும். பெண் வாரிசுகள் இல்லாத வீட்டில் அந்த பொருட்கள் அனைத்தும் அந்த வீட்டிற்கு வந்த மருமகளை போய்ச் சேரும். சொத்து அம்மா பெயரில் இருந்தால் அது அந்த வீட்டின் பெண் வாரிசுக்கு போய் சேர்ந்து விடும் என்று, சில பேர் வீடுகளில் பல பெரிய பிரச்சனைகள் கூட வந்த கதையெல்லாம் உண்டு.

women5

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். தாய் பயன்படுத்திய எல்லா பொருட்களும் தன்னுடைய மகளுக்கு மருமகளுக்கு சொந்தமாகும் போது குறிப்பிட்ட இந்த ஒரு நகையை மட்டும் தாயிடமிருந்து மகளுக்கோ, மருமகளுக்கோ கொடுக்கக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அது என்ன பொருள் என்றால் தாய் அணிந்திருந்த திருமாங்கல்ய குண்டுகள் தான்.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் தன் தாய் பயன்படுத்திய தாலி குண்டுகளை அந்த வீட்டின் பெண் வாரிசுக்கு கொடுத்து விடுவார்கள். சிலபேர் மஞ்சள் கயிறு கோர்த்து மாங்கல்யத்தை கழுத்தில் கட்டி இருப்பார்கள். சில பேர் சரடு போட்டு மாங்கல்யத்தை தங்களுடைய கழுத்தில் போட்டு இருப்பார்கள். அந்த சரடினை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் தவறு கிடையாது. அந்த குண்டுகளை மட்டும், அந்த தங்கத்தை மட்டும் குலதெய்வ கோவில் உண்டியலில் சேர்த்து விடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

mangalyam1

நிறைய பேர் இந்த திருமாங்கல்யக் குண்டுகளை கடையில் கொடுத்து மாற்றி, புது தங்கத்தை வாங்கிக் கொள்வார்கள். அப்படி இல்லை என்றால் இந்த திருமாங்கல்ய தங்கத்தை உருக்கி வேறு ஏதாவது ஒரு நகையை செய்து தங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்வார்கள். இப்படி அந்தத் தங்கத்தை நாம் மீண்டும் பயன்படுத்துவதால் அதில் நமக்கு கெடுதல் ஏற்படுமா இல்லையா என்ற கேள்வி எழுப்புவதை விட, அந்த தங்கத்தின் மூலம் நமக்கு எந்த ஒரு நல்லதும் கிடைக்காது என்பதுதான் உண்மை.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் சண்டை சச்சரவு காரணமாக, மகள் இருந்தும் அம்மாவின் நகைகள் மருமகளுக்கு போய் சேர்ந்துவிடும். அதுவும் தவறான ஒரு விஷயம் தான். தாய்க்கு மகள் இருக்கும்போது, தாய் அணிந்திருந்த நகையை தன்னுடைய மகள் அணிந்துகொண்டால் மட்டுமே அந்தத் தாயின் ஆத்மா சாந்தி அடையும் என்பதும் ஒருவகையில் உண்மை.

mangalyam

முடிந்த வரை தாய் அணிந்திருந்த திருமாங்கல்ய குண்டுகளை குலதெய்வ கோவிலில் சேர்த்து விடுவதே நல்லது. உங்களுடைய குலத்தை விருத்தி செய்வதற்காக உங்கள் வீட்டிற்கு ஒரு பந்தத்தை ஏற்படுத்தி தருவதற்கு பாலமாக அமைவது தான் இந்த திருமணம், இந்த திருமாங்கல்யம். குலம் விருத்தி அடைய காரணமாக இருந்த அந்த பெண் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை குலதெய்வ கோவிலில் சேர்ப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பின்பற்றலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -