இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி திருப்பதிக்கு சென்றால் கடன் சுமை அதிகரிக்கும்

thirupathi
- Advertisement -

பணக்கார கடவுள் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருபவர் திருப்பதி ஏழுமலையான். அவருக்கு வருடம்தோறும் வரக்கூடிய காணிக்கைகள் என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். அவரை பங்குதாரராக சேர்த்து செய்யக்கூடிய தொழிலில் லாபம் மட்டுமே ஏற்படும் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது. அதனாலேயே பல பேர் திருப்பதி ஏழுமலையானை தங்கள் பங்குதாரராக சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் தங்களால் இயன்ற அளவு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

திருப்பதி சென்றால் திருப்பம் ஏற்படும் என்ற ஒரு பொன்மொழி இருக்கிறது. அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் நல்ல பல திருப்பங்களை நிகழ்த்தக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக திருப்பதி ஏழுமலையான் விளங்குகிறார். அதனால் அவரை அடிக்கடி சென்று தரிசிக்கும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் ஒரு சில ராசிக்காரர்கள் அவரை அடிக்கடி சென்று தரிசித்தால் அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஜோதிடம் குறித்த பகுதியில் எந்த ராசிக்காரர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தால் கடன் சுமை அதிகரிக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திர பகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர் செல்வ செழிப்புடன் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சந்திர பகவானின் முழு அருளும் திருப்பதியில் கிடைக்கும். அதனால் தான் திருப்பதி செல்பவர்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் திருப்பதியில் ராமானுஜரின் எந்திரச் சக்கரங்கள் பதிக்கப்பட்டு இருப்பதால் ஜாதக, செய்வினை, புத்திர தோஷங்கள் அனைத்தும் நீங்குகிறது. மேலும் ஒரு வீட்டில் வாஸ்து சரியாக இருந்தால் அந்த வீட்டில் செல்வ செழிப்பிற்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது அல்லவா? இந்த வாஸ்து திருப்பதியில் சரியான முறையில் அமைந்திருப்பதால் தான் செல்வ செழிப்பிற்கு அங்கு பஞ்சமே இருப்பதில்லை.

சந்திர பகவானால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஜாதகக்காரர்கள் திங்கட்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையானை சென்று தரிசித்து வருவதன் மூலம் அவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். மேலும் தோல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்கள் திருப்பதி சென்றுவர அவர்களின் பிரச்சனைகள் தீரும். பொதுவாக திருப்பதி ஏழுமலையானை நாம் வியாழக்கிழமை அன்று அதிகாலை தரிசனம் செய்யும் பொழுது ஏழுமலையானின் பார்வை முழுமையாக நம் மீது படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

திருப்பதி ஏழுமலையானுக்கு நெற்றியில் போடப்படும் நாமமானது இரண்டு கண்களையும் மறைக்கும் அளவிற்கு பெரியதாக போடுவார்கள். ஆனால் வியாழக்கிழமை அன்று மட்டும் காலையில் அந்த நாமத்தை முழுமையாக கலைத்துவிட்டு ஆராதனை செய்வார்கள். அந்த சமயத்தில் அவரை நாம் தரிசிக்கும் பொழுது அவரின் முழு பார்வை நம் மீது படும் என்று கூறப்படுகிறது.

அனைத்து ராசிக்காரர்களும் திருப்பதி சென்று வரலாம். ஆனால் சிம்மம், தனுசு, கும்ப லக்னம் கொண்ட ராசிக்காரர்கள் திருப்பதிக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும்தான் சென்று வர வேண்டும். அதிகப்படியாக அவர்கள் திருப்பதிக்கு சென்றால் அவர்களுக்கு கடன் சுமை என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்.

திருப்பதி பற்றிய அற்புதமான தகவல்களை தெரிந்து கொண்டு ஏழுமலையானின் பரிபூரணமான அருளை பெற்று செல்வ வளத்துடன் சிறப்பாக வாழலாம்.

- Advertisement -