திருஷ்டிக்கு பலி கொடுக்க தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணிக்காயை மட்டும் பயன்படுத்துவது ஏன்? இதற்கு பின்னால் இப்படி ஒரு அதிர வைக்கும் காரணம் இருப்பது தெரியாம போச்சே!

thirusti-things
- Advertisement -

பொதுவாக ஒருவர் மேல் விழும் திருஷ்டி அல்லது கடை, வாகனம் போன்ற சொத்துக்கள் மீது நாம் திருஷ்டி கழிக்க எண்ணினால் முதலில் தேர்ந்தெடுப்பது எலுமிச்சை கனியாக தான் இருக்கும். எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுகிறது. கனிகளில் அபூர்வ வகையாக இருக்கும் இந்த எலுமிச்சை கனியை எல்லாவற்றிற்கும் பலி கொடுப்பது உண்டு. நல்ல விஷயங்களுக்கும் எலுமிச்சை கனியை தான் பலி கொடுப்பார்கள். கெட்ட விஷயங்களுக்கும் கூட எலுமிச்சை கனியை தான் பலி கொடுப்பார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? வேறு எந்த பொருட்களையும் கொண்டு திருஷ்டி கழிக்க முடியாதா? என்று நமக்கு பல முறை தோன்றி இருக்கலாம்! ஆனால் இதற்கான சரியான விடையைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

lemon

திருஷ்டி கழிக்க பயன்படும் எலுமிச்சை கனிக்கு உயிர் உண்டு. உயிர் இருக்கும் பொருட்களை மட்டுமே நாம் பலி கொடுக்க முடியும். உயிர் இல்லாத பொருட்களை பலி கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. எலுமிச்சை கனி மட்டும் அல்லாமல் வெண்பூசணி மற்றும் தேங்காய் ஆகிய பொருட்களுக்கும் உயிர் உண்டு. தேங்காய் உடைத்து வழிபடுவதன் காரணமும் இது தான்.

- Advertisement -

வெண் பூசணியில் இருக்கும் சக்தி மிகப்பெரிய திருஷ்டிகளை கூட கிரஹித்து தன்னை தானே பலி ஆக்கிக் கொள்ளும். அதனால் தான் பெரிய பெரிய கடை, தொழில் செய்யும் ஸ்தாபனங்கள் போன்ற இடங்களுக்கு எல்லாம் அமாவாசை தோறும் வெண் பூசணியை கொண்டு திருஷ்டி சுற்றி போடுகிறார்கள். இதன் மூலம் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண் திருஷ்டி நீங்கி வியாபாரம் செழிப்படையும் என்பது நம்பிக்கை.

thengai

பிள்ளையாருக்கு 108, 1008 என்கிற கணக்கில் எல்லாம் தேங்காயை பலி கொடுப்பது உண்டு. தேங்காய் சில்லு சில்லாக சிதற வைத்தால்! நம் வேண்டுதல்களை அது விரைவில் பலிக்க செய்யும் என்பது நம்பிக்கை. இதையே நீங்கள் மாங்காய்க்கு செய்ய முடியுமா? மாங்காய்க்கு அத்தகைய சக்திகள் இல்லை! எந்த பொருளுக்கு உயிர் இருக்கிறதோ! அந்த பொருட்களை தான் நாம் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எலுமிச்சை, வெண் பூசணி, தேங்காய் ஆகிய இந்த மூன்று பொருட்களுக்கு உயிர் உள்ளது என்பது சாஸ்திரம் கூறும் உண்மையாகும்.

- Advertisement -

எலுமிச்சையை லேசாக கீறி அதில் கற்பூரத்தை ஏற்றி வலப்பக்கம் மூன்று முறையும், இடப்பக்கம் மூன்று முறையும் ஒருவரை கிழக்கு பக்கமாக நிறுத்தி சுற்ற வேண்டும். பின்னர் அதனை வெளியில் கொண்டு போய் கற்பூரத்தை மட்டும் தட்டிவிட்டு கையிலிருக்கும் எலுமிச்சை கனியை இரண்டாக கிழித்து வலது கையில் இருக்கும் எலுமிச்சையை இடது புறத்திலும், இடது கையில் இருக்கும் எலுமிச்சையை வலது புறத்திலும் தூக்கி வீச வேண்டும். பின்னர் திரும்பி பார்க்காமல் உள்ளே வந்து கைகளை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஒரு நபர் மேல் இருக்கும் எத்தகைய திருஷ்டியும் தன்னாலே விலகிச் சென்றுவிடும்.

thirusti poosani

அதே போல சுபகாரிய நிகழ்வுகளுக்குப் பிறகு திருஷ்டி சுத்தி எடுப்பது, வெற்றி தரும் நல்ல விஷயங்களுக்கு சென்று வருபவர்களுக்கு திருஷ்டி கழிப்பது, பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் திருஷ்டி சுற்றிப் போடுவது போன்றவற்றை தொடர்ந்து செய்யும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் திருஷ்டி பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். மேலும் இவற்றை நிலை வாசலில் முறையாக கட்டித் தொங்கவிடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -