வீட்டுக்கு யாராவது வந்துவிட்டுப் போனாலே பிரச்சனையா இருக்கா? அப்படினா இத செஞ்சு பாருங்க எல்லா திருஷ்டியும் கழியும்!

thirusti-ven-kadugu
- Advertisement -

ஒரு சிலருடைய வீட்டிற்கு யாராவது வந்தாலே பிரச்சனையாகவே இருக்கும். அதுவரை நன்றாக இருந்த குடும்பத்தில் அந்த நபர் வந்து போன பிறகு அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட துவங்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டு வாக்குவாதங்கள் ஆக மாறும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தை சதா அழுது கொண்டே இருக்கும். இப்படி ஒருவர் வந்து போன பிறகு வீட்டில் கெட்டதாகவே நடந்து கொண்டிருந்தால் செய்ய வேண்டிய திருஷ்டி கழிப்பு முறையைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

fight4

நல்லா இருக்கிற குடும்பத்தில் யாராவது குழப்பம் பண்றதுக்குன்னே வருவது போல உங்களுக்கு சில நேரங்களில் எண்ணங்கள் உதிக்கும். அது போன்றவர்கள் வீட்டில் வந்து சென்றால் இது போல திருஷ்டி தோஷம் கழிப்பு முறையை செய்யலாம். ஒருவர் மனதில் இவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று நினைத்து விட்டாலே அது திருஷ்டி தோஷம் தான். நல்ல எண்ணத்தில் யாரும் நம்மை பார்ப்பது இல்லை. நம் சொந்தக்காரர்கள் ஆகவே இருந்தாலும் நம் வளர்ச்சியை கண்டு பொறாமை படத்தான் செய்கிறார்கள். இப்படியிருக்க அவர்களின் எண்ணங்கள் மட்டும் நல்லவையாக இருந்து விடுமா என்ன?

- Advertisement -

நன்றாக இருக்கும் குடும்பத்தில் குழப்பங்களை உண்டு பண்ணும் நபர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது தான் நல்லது. என்னதான் ரத்த பந்தம் ஆக இருந்தாலும் நம்மைப் பற்றிய நல்ல சிந்தனைகள் இல்லாத நபர்களை நாம் புறக்கணிப்பது தான் நல்லது. நீ நன்றாக இருக்கிறாயா? நான் நன்றாக இருக்கிறேன்! என்ற பேச்சு வார்த்தை வரை வைத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சியை கண்டு பொறாமை படுபவர்கள் நம்முடன் இருந்தால் நமக்கு எப்பொழுதும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

venkadugu

நம் வளர்ச்சியை கண்டு பெருமிதம் கொள்பவர்கள் மத்தியில் நாம் இருப்பது தான் நமக்கு நன்மைகளைக் கொடுக்கும். எனவே யார் நம்முடன் இருக்க வேண்டும்? யார் நம்மிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இத்தகைய பொறாமை எண்ணங்களால் உருவாகும் திருஷ்டிகளை கழிக்க திங்கட்கிழமையில் இது போல் ஒரு முடிச்சை செய்து வைத்து ஞாயிற்றுக் கிழமையில் அதனை குடும்பத்தாரை அமர வைத்து திருஷ்டி சுத்தி எரித்து விட வேண்டும். அதற்கு தேவையான பொருட்கள் என்ன? எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

- Advertisement -

முதலில் ஒரு சிகப்பு நிற துணியை சிறிய அளவில் விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் உப்பு வைத்துக் கொள்ளுங்கள். உப்பு, கல் உப்பாக இருக்க வேண்டும், தூளாக இருக்க கூடாது. மூன்று நீளமாக இருக்கும் வர மிளகாய்களை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் திருஷ்டி கழிக்கும் வெண்கடுகு 2 ஸ்பூன் அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். வெண்கடுகு எத்தகைய கண் திருஷ்டியை போக்கும் அற்புத பொருளாகும். வெண்கடுகு படபடவென எரியும் பொழுது நம் மீது இருக்கும் திருஷ்டியும் படபடவென பொரிந்து எரிந்து பஸ்பமாகிவிடும்.

thirusti-red-mottai

திங்கட்கிழமையில் இதனை சிகப்பு துணியில் வைத்து முடிச்சாக கட்டி வீட்டின் வாசலில் மழை பெய்யாத இடத்தில் கட்டி வைக்க வேண்டும். பின்னர் அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமையில் அதனை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அமர வைத்து வலப்புறம் மும்முறையும், இடப்புறமும் மும்முறையும் திருஷ்டி கழிப்பது போல சுற்ற வேண்டும். இறுதியாக திருஷ்டிக் சுற்றுபவர்கள் தங்களைத் தாங்களே இதே போல் சுற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை கொண்டு போய் வெளியில் வைத்து எண்ணெய் ஊற்றி கொளுத்தி முழுவதுமாக எரிய விட்டுவிட வேண்டும். எரியும் பொழுது தரை வீணாகிவிடும் எனவே ஏதாவது ஒரு கலனில் வைத்து எறியுங்கள். இவ்வாறு செய்ய எல்லா திருஷ்டியும் கழிந்து போகும்.

- Advertisement -