திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்? இதையும் சேர்த்து வையுங்கோ அக்கம் பக்கம் கண்ணு உங்க குடும்பம் மேல படாம இருக்குமே!

vasal-lakshmi-lemon
- Advertisement -

திருஷ்டி கழிக்க வாசலில் பொதுவாக எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைப்பது உண்டு. இப்படி வைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அக்கம் பக்கம் கண்ணுபடாமல் இருக்க பலரும் பல விஷயங்களை செய்து வருகிறோம். அந்த வரிசையில் எலுமிச்சை பழத்தை வைத்து என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கண் திருஷ்டி ஆரோக்கிய கோளாறுகளை கூட ஏற்படுத்த வல்லது. இதனால் தான் ‘கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’ என்று பழமொழியாக கூறி வைத்தனர் நம் முன்னோர்கள். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் பொழுதும், புட்டி பால் கொடுக்கும் பொழுதும் உள்ளே எவ்வளவு இருக்கிறது? என்பதை காண்பிக்க கூடாது என்று கூறுவார்கள். அதனால் புட்டியில் துணியை போட்டு சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு வைப்பார்கள். சாப்பாடை கூட ஒரேடியாக எடுத்து வராமல் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து வெளியில் வேடிக்கை காட்டி ஊட்டுவது வழக்கம்.

- Advertisement -

இப்படிப்பட்ட அக்கம் பக்கத்தினரின் பொல்லாத திருஷ்டிகளை கழிக்க வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வையுங்கள். இப்படி வைக்கும் பொழுது வெட்டிய எலுமிச்சை பழத்தில் ஒரே ஒரு கல் உப்பையும், மூன்று மிளகையும் சொருகி வையுங்கள். கல் உப்பு மற்றும் மிளகு இந்த இரண்டும் ரொம்பவே சக்தி வாய்ந்த பொருட்களாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. ரோக நிவர்த்தி செய்வதற்கு கல் உப்பு மற்றும் மிளகை தானம் செய்வது வழக்கம். அது போல இந்த உப்பு மற்றும் மிளகை எலுமிச்சையில் சொருகி அதன் மீது குங்குமம் அல்லது மஞ்சள் வைத்து இரண்டு புறமும் வைக்க வேண்டும்.

தீய சக்திகள் உள்ளே வராமல் இருக்க ஒரு எலுமிச்சையில் மஞ்சளும், ஒரு எலுமிச்சையில் குங்குமமும் தடவி இரண்டு புறமும் வைப்பது உண்டு. அது போல கண் திருஷ்டிகள் கழிய ரெண்டு புறமும் குங்குமத்தை மட்டும் தடவி வைக்கலாம். கல் உப்பு மற்றும் மிளகை வைக்கும் பொழுது நீங்கள் இரண்டு புறமும் குங்குமத்தை தடவி வைப்பது போதுமானதாகும்.

- Advertisement -

இது போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் நல்ல எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதன் சாறு வெளியில் வராதவாறு மெதுவாக பெரிய கல் உப்பு ஒன்றையும், மிளகு மூன்றையும் சொருகி அதன் மீது குங்குமம் தடவி இரண்டு புறமும் நிலை வாசலில் வைக்க வேண்டும். சிலர் நிலை வாசலை விடுத்து பொது வாசலில் கூட இது போல செய்து வைக்கிறார்கள். துஷ்ட சக்திகளும், தீய சக்திகளும் அண்டாமல் இருக்க நிலை வாசலில் வைப்பது நல்லது.

அது போல பொல்லாத கண் திருஷ்டிகளும், கண்ணேறுகளும் கழிய பொது வாசலில் வைக்கலாம். யாருடைய கண்களிலும் நீங்கள் எலுமிச்சைக்குள் வைத்திருக்கும் உப்பு மற்றும் மிளகு தென்படக்கூடாது. இவை மூன்றும் ஒன்று சேரும் பொழுது கெட்ட அதிர்வலைகளை ஈர்க்கக்கூடிய சக்தி பெறுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினருடைய கண் திருஷ்டிகள் ஒழிந்து ஆரோக்கியம் காக்கப்படும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -