ஞாயிற்றுக்கிழமையில் இந்த 2 பொருளை எரித்தால் போதும்! யாருடைய சூழ்ச்சியும் உங்களை ஒன்றும் செய்யாது!

milagai-salt-thirusti

இந்த பிரபஞ்சத்தில் நல்லது என்று ஒன்றிருந்தால் கெட்டது என ஒன்றும் இருக்கும். உங்களுடன் உங்களை சுற்றி இருப்பவர்களுள் ஒரு சிலர் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்! ஆனால் இன்னும் சிலர் உங்களைப் பார்த்து பொறாமைப்படவும் செய்வார்கள்! இப்படி உங்களுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை படுபவர்களின் சூழ்ச்சியை கூட முறியடிக்க கூடிய அற்புத சக்தி இந்த இரண்டு பொருளுக்கு உண்டு. இதை வைத்து எப்படி கண் திருஷ்டியை போக்குவது? என்பது தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

thirusti

கண்திருஷ்டி நீங்க பொதுவாக கடுகுடன் சேர்த்து வர மிளகாய், கல் உப்பு, கற்பூரம் போட்டு திருஷ்டி கழித்து முச்சந்தியில் போடுவது வழக்கம். ஆனால் எதிரிகளின் சூழ்ச்சிகளையும் உங்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்களுடைய திருஷ்டிகளையும் நீக்க இந்த இரண்டு பொருட்களை இப்படி செய்தால் போதும்.

கல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் இந்த இரண்டிற்கும் கொடூர திருஷ்டிகளையும் அழிக்கும் ஆற்றல் உண்டு. அதை எப்படி முறையாக செய்து பயன் அடைவது? என்பதை பார்ப்போம். நீங்கள் சாம்பிராணி போடும் தூபக்கால் அல்லது மண்சட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அதில் தேங்காய் ஓடு அதாவது கொட்டாங்குச்சியை எரித்து நெருப்பு ஜுவாலை வர வையுங்கள். தேங்காய் ஓட்டை நேரடியாக கேஸ் அடுப்பின் மீது வைத்து எரிய விட்டால் சுலபமாக எரித்து விடலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

coconut-shell-fire

எரியும் ஜுவாலையில் உங்களுடைய எதிரிகள் அல்லது கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள் உடைய பெயர்களை உச்சரித்துக் கொண்டே 9 முறை இந்த விஷயத்தை செய்ய வேண்டும். சிறிதளவு கல் உப்பு மற்றும் 9 வரமிளகாய்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை பெயரை உச்சரிக்கும் பொழுதும் நெருப்பில் சிறிதளவு உப்பையும், ஒரு மிளகாயையும் போட வேண்டும்.

ஒன்றிற்கும் மேற்பட்ட எத்தனை பெயர்களை வேண்டுமானாலும் நீங்கள் இப்படி உச்சரிக்கலாம். அது போல் ஒவ்வொரு முறையும் கல் உப்பு மற்றும் வரமிளகாய் போட்டு ஒன்பது மிளகாய்கள் தீர்ந்தவுடன் யாருடைய கால்களிலும் மிதிபட இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டின் மொட்டை மாடி, பால்கனி அல்லது வெளியிடங்களில் தான் செய்ய வேண்டும்.

salt-milagai

எந்த காரணம் கொண்டும் வீட்டிற்குள் செய்யக்கூடாது. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏழு முதல் எட்டு மணி வரையிலான காலகட்டத்தில் இதுபோல் செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் எத்தகைய தடைகளும் நொடியில் நீங்கும். நீங்கள் எவ்வளவு உயரத்தில் வளர்ந்தாலும் உங்களை பார்த்து வைக்கும் எத்தகைய கண் திருஷ்டிகளும் எதுவுமே செய்யாது பாதுகாக்கும்.