- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி போக்கும் செடிகள்

கண் திருஷ்டி போக்கும் செடிகள்

- Advertisement -

ஒருவர் நன்றாக இருந்தால் அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுபவர்களை விட பொறாமைப்படுபவர்கள் தான் இவ்வுலகில் ஏராளம். ஒருவரை பார்த்து ஒருவர் பொறாமை கொள்வதால் கிடைக்கப் போவது ஒன்றும் இல்லை. கண் திருஷ்டி பொல்லாதது என்பார்கள், எனவே உங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் மூலம் ஏற்படும் திருஷ்டிகள் கழிய, இந்த செடிகளை வீட்டில் வைப்பது நல்ல பலன் தரும் என்கிறது சாஸ்திரம். அப்படியான செடிகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பகுதியின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கண் திருஷ்டிகளை போக்குவதில் முதல் இடம் பிடித்திருக்கும் செடியானது கற்றாழை! கற்றாழை செடியில் இருக்கக் கூடிய பெரிய மடல்களாக இருக்கக் கூடிய ஒரு கொத்தை அப்படியே வேருடன் பிடுங்கி எடுத்து நன்கு சுத்தம் செய்துவிட்டு ஒரு கருப்பு நூலில் கட்டி வாசலுக்கு வெளியில் மேற்பகுதியில் கட்டி தொங்க விட்டால் அது காய்ந்து போகும் வரை திருஷ்டிகள் எதுவும் நம்மை அண்டாது என்பார்கள். கற்றாழை செடி அவ்வளவு எளிதில் காய்ந்து போகக் கூடிய செடி அல்ல! நீண்ட காலம் அது காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு பசுமையுடன் இருக்கும் தன்மை கொண்டது எனவே இது வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் அண்டாது.

- Advertisement -

அடுத்ததாக ரோஜா பூச்செடியும் திருஷ்டிகளை கழிக்க உதவி செய்யும் ஒரு அற்புதமான செடியாகும். ரோஜா செடியை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. விதவிதமான வண்ணங்களில் அழகே பொறாமைப்படும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்த ரோஜா செடிகளில், மஞ்சள் ரோஜா செடியாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் ரோஜா செடி வீட்டு வாசற்படியில் மேற்புறப் பகுதியில் வைக்க வேண்டும். தெருவில் நடந்து சென்றாலே, உங்கள் வீட்டில் இந்த செடி இருப்பதை அனைவரும் பார்க்கும்படி அமைந்திருக்க வேண்டும்.

மஞ்சள் நிற ரோஜா செடி வீட்டில் இருந்தால், உங்களை பார்த்து பொறாமை கொள்பவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். மஞ்சள் நிறத்திற்கு திருஷ்டிகளை ஈர்க்கும் தன்மை உண்டு. அதனால் தான் பொன் அரளி செடிகளை வீட்டின் முன் வளர்ப்பார்கள். மஞ்சள் நிற அரளி, மஞ்சள் நிற ரோஜா, மஞ்சள் நிற வாசனை அற்ற பூக்களை வீட்டு வாசலில் வளர்ப்பதால் கண் திருஷ்டிகள் அண்டாது.

- Advertisement -

அடுத்ததாக ஆகாச கருடன் கிழங்கு செடி. ஆகாச கருடன் கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த ஆகாச கருடன் கிழங்கு ஒன்றை வாங்கி பூஜை அறையில் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை தடவி கருப்பு நிற கம்பளி கயிறு ஒன்றை கட்டி வீட்டு வாசலில் தொங்க விட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டிகளும், செய்வினைகளும் உங்கள் வீட்டை விட்டு செல்லும் என்பது நிதர்சனமான உண்மை. உங்கள் வீட்டில் செய்வினை, ஏவல்கள், திருஷ்டிகள் இருக்கிறதா? என்பதை கூட இது காட்டிவிடும் அற்புதமான மூலிகை செடி ஆகும்.

இதையும் படிக்கலாமே:
31-10-2024 சிவன் வழிபாடு

ஆகாச கருடன் கிழங்கு செடியை நீங்கள் கட்டி தொங்கவிட்ட உடன் அதில் பசுமையான கிளைகள் முளைக்க ஆரம்பிக்கும். இதுவும் ஆக்சிஜனை இழுத்துக் கொண்டு நீண்ட நாள் மண், தண்ணீர், சூரியன் எதுவும் இல்லாமல் வாழக்கூடிய தன்மை கொண்டது. பசுமையான கிளைகள் முளைத்தால் உங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை ஆற்றல்களும் இல்லை என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அப்படி அல்லாமல் காய்ந்து விட நேர்ந்தால் கெட்ட சக்திகளை ஆதிக்கம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம். வீட்டில் துர் சக்திகள் இருப்பது போல தோன்றினால், இருவேளை சாம்பிராணி தூபத்துடன் கருவேலம் பொடியும், வெண்கடுகு பொடியும் சேர்த்து புகை போடுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

சற்று முன்