வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று, 17 தீபம் ஏற்றினால் போதும். உங்களால் நம்பவே முடியாத அதிசயங்கள் நடக்கும்.

temple-vilakku

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான கஷ்டத்திற்கும் ஒரே ஒரு வழிபாடானது தீர்வு தருகிறது என்றால், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை அந்த கோவிலுக்கு சென்று, அந்த தீபங்களை ஏற்றி, அந்த தெய்வத்தை வழிபட்டு வருவதில் எந்த ஒரு தவறும் இல்லை. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது, கட்டாயம் சென்று வர வேண்டிய அந்த கோவில் எது? அங்குள்ள தெய்வங்களை எப்படி முறையாக வழிபட வேண்டும். அப்படி முறையாக வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் என்னென்ன இன்னல்கள் தீரும். என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

thiruvenkadu-temple

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் தான் அந்த சிறப்பு வாய்ந்த கோவில். கல்விக்கும், தொழிலுக்கும், அதிபதியாக இருக்கும் புதன் பகவானுக்கு இத்தலத்தில் தனி ஆலயம் உண்டு. அதுமட்டுமல்லாமல் காசிக்கு நிகரான புண்ணியத்தை தேடித்தரும் கோவில் என்ற பெருமையும் இதற்கு உள்ளது. இந்த கோவிலில் இருக்கும் ருத்ர பாதத்தினை, வழிபட்டால் 21 தலைமுறைறினர் செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். காசியில் விஷ்ணு பாதம். திருவெண்காட்டில் ருத்ர பாதம்.

காசியில் இருக்கும் விஷ்ணு பாதத்தை வழிபட்டால் கிடைக்கும் பலனைவிட, திருவெண்காட்டில் இருக்கும் ருத்ர பாதத்தை வழிபட்டால் மூன்று மடங்கு அதிகப்படியான புண்ணியம் கிடைக்கும் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும். இதனால்தான் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானுக்கு 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த முறைப்படி புதன் பகவானுக்கு இத்திருத்தலத்தில் தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

thiruvenkadu-temple1

தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை தீர, தீராத நோய் தீர, குழந்தை வரம் பெற, திருமண யோகம் வர, தீராத பாவங்கள் தீர இத்திருத்தலத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு 17 தீபங்களை ஏற்றினாலே போதும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல், இத்தளத்தில் ஹோமம் நடத்தினால், நம்மைப் பிடித்திருக்கும் பில்லி, ஏவல், சூனியம் போன்ற கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் அனைத்தும் விலகிவிடும். கோர்ட் வழக்குகள் நமக்கு சாதகமாக தீர்ப்பு பெறும். குறிப்பாக குடும்பப் பிரச்சனை தீர்வதற்கு இத்திருத்தலத்தில் இருக்கும் அகோர மூர்த்தியை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

neideepam

சிலபேருக்கு இத்திருத்தலத்திற்கு சென்று புதன் பகவானுக்கு தீபம் ஏற்றினால் யோகம் வரும் என்று தெரிந்திருக்கும். இதைத் தெரிந்து, இந்த கோவிலுக்கு செல்பவர்கள், நேராக புதன் பகவானை தரிசனம் செய்ய சென்று விடுவார்கள். ஆனால், இது மிகப்பெரிய தவறு. முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரை வழிபட்டு, அதன் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, அதன் பின்பு இறுதியாகத் தான் புதன் பகவானை வழிபட்டு 17 தீபங்கள் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே சரியான முறையும் கூட. முடிந்தால் இத்திருத்தலத்திற்கு புதன்கிழமை அன்று சென்று புதன் பகவானை 17 தீபங்கள் ஏற்றி வழிபட்டு, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தலைவாரும் பெண்களே உஷார்! எப்போதுமே இப்படி தலையை சீவி கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thiruvenkadu budhan temple Tamil. Thiruvenkadu budhan temple. Thiruvenkadu temple in Tamil. Thiruvenkadu budhan. Thiruvenkadu pariharam.