இந்த வாசனை திரவியம் உங்களது பீரோவில் இருந்தால், தங்க நகை சேருவதை யாராலும் தடுக்க முடியாது.

gold-lakshmi

பெண்களுக்கு பொன்னகை எதற்கு? புன்னகை இருந்தால் போதாதா! என்று கூறிய காலம் மாறி, புன்னகையுடன் இருக்கக்கூடிய பெண், பொன் நகைகளையும் சேர்த்து வைக்கும் பெண்ணாக இருப்பதையே புத்திசாலித்தனம் என்று கூறுகிறது இந்த காலம். என்ன செய்வது? காலத்திற்கு ஏற்ப பழமொழிகளையும் நாம் மாற்றி வைத்துக் கொள்ளத் தான் வேண்டும். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் கையில் பணமாக வைத்துக் கொண்டிருந்தால், அதை செலவு செய்யாமல் இருப்பது பெரும்பாடு ஆகிவிடும். அதையே தங்கத்தில் முதலீடு செய்து வைத்தால், பணத்தை பொக்கிஷமாக பாதுகாக்க முடியும். அதோடு தங்கம் மகாலட்சுமி அம்சம் என்பதால், நம் வீட்டில் அந்தஸ்தையும், மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உயர்த்திக் கொண்டே இருக்கும். அந்த சந்தோஷத்தை சொல்லினால் கூற முடியாது. அது ஒரு குண்டுமணி தங்கமாக இருந்தாலும் தங்கத்தை வாங்குவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இது இயற்கையான ஒன்று தான். இப்படிப்பட்ட தங்கத்தை எப்படியாவது மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய ஆசை.

Gold rate in Saravana stores

எந்த பரிகாரத்தை செய்தாவது நம் வீட்டில் தங்கநகை சேருவதற்கான வழியை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களை படித்து, ஆராய்ச்சி செய்து அதை உபயோகப்படுத்தியும் பார்க்கின்றோம். சிலருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சிலருக்கு பலன் அளிக்காமல் இருக்கலாம். இதற்கு காரணம் நம் வீட்டில் இருக்கும் துர் சக்தியாக இருக்கக்கூடும். அல்லது நம் ஜாதகத்தில் இயற்கையாகவே தங்கநகை சேராமல் இருக்க கூடிய அமைப்பும் இருக்கும். இந்த இரண்டிற்கும் சேர்த்து, இரண்டு சுலபமான பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஸ்வர்ண தோஷம் இருந்தால் கூட தங்கநகையானது நம்மிடம் தங்காது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். செவ்வாய் கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்ததும் யாரிடமும் பேசாமல் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, அதன் பின்பு ஒரு பித்தளை கலசத்தில் (சொம்பில்) துவரம்பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த செம்பின் மேல் ஒரு தேங்காயை வைக்க வேண்டும். இதைத் தயார் செய்வதற்கு முன்பாக தயவுசெய்து யாரிடமும் பேச வேண்டாம்.

Lord Murugan Vel

பிறகு உங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து வீட்டின் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று, நீங்கள் தயார் செய்து வைத்திருந்த பித்தளை கலசத்தை முருகன் பாதங்களில் வைத்து ஸ்வர்ண தோஷம் நீங்கு வதற்காக, செவ்வாய் கிரக பூஜை தானம் என்று கூறி, புரோகிதரிடமே அந்த சொம்பை தானமாக கொடுத்து விட வேண்டும். முருகனை மனதார வேண்டிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் நம் வீட்டிற்கு வந்துவிடலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்த அன்று  மாலை வேலையில், கடலையை வேகவைத்து சுண்டல் செய்து, முருகனுக்கு நிவேதனமாக படைத்து, பிரசாதமாக அனைவருக்கும் கொடுப்பது நல்ல பலனை தரும். உங்களுடைய ஜாதகத்தில் தங்கம் சேராமல் இருக்க ஏதாவது தோஷம் இருந்தாலும் இந்த பரிகாரத்தின் மூலம் நிச்சயமாக நிவர்த்தியாகிவிடும்.

Elakkai

அடுத்ததாக நம் வீட்டில் பீரோவில் தங்கம் வைக்கும் இடத்தில் ஒரு செம்பு பாத்திரத்தில் பன்னீர் 1/2 கப், பச்சைகற்பூரம் 3, ஏலக்காய் 5, துளசி 5 இலைகள். பச்சைக் கற்பூரமானது பன்னீரில் கரைந்து, ஏலக்காயுடன் சேர்ந்த நறுமணம் எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்தில் நிச்சயமாக தங்கமும் சேரும் என்பது தான் உண்மை. உங்களால் முடிந்தால் இதில் ஒரு குண்டுமணி தங்கத்தை போட்டு வைக்கலாம். மூக்குத்தி, மோதிரம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்த வாசனை திரவியத்தை வளர்பிறை நாளில் தான் தயார் செய்து வைக்க வேண்டும். அமாவாசை முடிந்து மூன்று நாட்கள் கழித்து இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலனைத் தரும். அடுத்த மாதம் வளர்பிறை வரும்வரை இதை உங்கள் பீரோவில் வைக்கலாம். எதையும் போட்டு மூடி விடக்கூடாது. அந்த நறுமணம் உங்களது பீரோ முழுவதும் நிறைந்திருக்க வேண்டும். இந்த வாதத்திற்கு வீட்டில் இருக்கும் துர்சக்திகள் கூட வெளியே சென்றுவிடும். இப்படியிருக்க அதிர்ஷ்டம் நிச்சயம் உங்களை தேடி வரும் என்று நம்புங்கள். நம்பிக்கையோடு செய்யும் பரிகாரம் தான் பலனளிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே
காலபைரவரை முறைப்படி இப்படித்தான் வணங்க வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thangam sera parikaram Tamil. Thangam sera Tamil. Vettil thangam sera. Thangam thanga pariharam Tamil