இந்த வார ராசிபலன் 19-04-2021 முதல் 25-04-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. தேவைக்கு ஏற்ப பணம் பல வழிகளில் உங்களது பணப்பெட்டியை வந்து நிரப்பும். முடிந்தவரை சிக்கணமாக செலவு செய்து கொள்ள வேண்டும். வீட்டில் உறவினர்களின் வருகை இருப்பதால், பணத்தை சந்தோஷமாக தாராளமாக செலவு செய்ய தோணும். இருப்பினும் செலவில் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். கையில் நிறைய பணம் இருக்கிறது என்று தாராளமாக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் உண்டு. சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்டநாட்களாக தொல்லை கொடுத்து வரும் பல வகையான பிரச்சினை, படிப்படியாக குறையும். கடன்தொகை வசூலாகும். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுக்க வேண்டியதாக இருந்தால், அந்த கடனை சீக்கிரம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வருமானத்தில் சிக்கல் ஏற்படும். செலவுக்கு தேவையான பணம் கையில் இருக்காது. முடிந்த வரை கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது ஜாக்கிரதையாக செல்லவேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்னச் சின்ன சிக்கல்கள் வந்துபோகும். விட்டுக் கொடுத்து தான் செல்லவேண்டும். தினம் தோறும் விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சொந்த பந்தங்கள் இடையே பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் யாரிடம் பேசினாலும் அவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். ஆக யார் என்ன பேசினாலும் நீங்கள் மௌனமாக தான் இருக்க வேண்டும். சொந்த பந்தங்களை விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். தினம்தோறும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வசூல் ஆகும். புதியதாக வீடு வாகனம் வாங்குவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. சொந்த பந்தங்கள் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்பார்கள். உங்களுடைய பொருட்களை மட்டும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். சில பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வேலையை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். யாரையும் நம்பி உங்களுடைய ரகசியங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி வியாபாரத்தில், அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தினந்தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எடுத்த காரியத்தில், எடுத்த முயற்சியில் உடனடியாக வெற்றி அடைவீர்கள். சோம்பேறித்தனத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சுறுசுறுப்பாக செயல்பட்டு, பம்பரம்போல் சுழன்று எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி புகழின் உச்சிக்கு செல்ல போகிறீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு கையில் பணப்புழக்கம் இருக்கும். ஆனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை என்று வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தான் செல்ல வேண்டும். வேலை செய்யும் இடத்தில அவ்வபோது சின்ன சின்ன குழப்பங்கள் வந்து போகும். சமாளித்து தான் ஆக வேண்டும். முன் கோபம் கூடாது. வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கொஞ்சம் கவனம் தேவை. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சமூகத்தில் இருந்த கெட்ட பெயர் மறைந்து, நல்ல பெயர் வரப்போகின்றது. அதாவது உங்களைப் பற்றி, தவறாக புரிந்து கொள்பவர்கள் கூட இனி வரும் நாட்களில் உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். திறமையாக செயல்பட்டு வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். யாருக்காவது பிரச்சனை என்று வந்து உதவி கேட்டால், அதற்கு ஓடி போய் உதவி செய்யும் உங்களது மனம் உங்களை உயர்த்தி செல்லப் போகின்றது. அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்த பிரச்சனையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மந்தமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து சஞ்சலம் கொடுக்கும். வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தான் செல்ல வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமெடுத்து உங்களது வேலைகளை சுறுசுறுப்பாக முடிக்க வேண்டும். இல்லை என்றால் நல்ல பெயரை இழக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் வாடிக்கையாளர்களை கவனமாக கையாள வேண்டும். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே இந்த வாரத்தில் தேவையான நல்ல பலனை பெற முடியும். சோம்பேறித்தனத்துடன் செயல்பட்டால் நிச்சயம் பிரச்சினைகள் பின் தொடரத் தான் செய்யும். மன உறுதியை அதிகரித்துக்கொள்ள ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் நன்மையாகவே நடக்கும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் இருக்கின்றது. முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அனாவசியமாக சக ஊழியர்களிடம் பேச வேண்டாம். தொழிலில் அதிக கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தெரியாதவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். மற்றபடி எல்லாமே நன்மையாக தான் நடக்கப் போகின்றது. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. தேவையற்ற சண்டை சச்சரவுகள் மூலம் இருந்த மனஸ்தாபங்கள் குறைந்து எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் சூழ்நிலை வந்துவிடும். இதுநாள்வரை எதையோ இழந்தது போல இருந்த நிலைமை மாறி, இனி எல்லாம் கிடைத்துவிட்டது என்ற மன நிலைக்கு வந்துவிடுவீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்த சந்தோஷம் அடைவீர்கள். கூடிய விரைவில் நிறைய நல்லது உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது பிரச்சினைகள் மேலும் மேலும் அதிகரிப்பது போல இருந்த, மனபாரம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். இனி எல்லாம் நன்மைதான். குலதெய்வ வழிப்பாட்டை செய்ய மறக்க வேண்டாம்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா திறமையும் வெளிப்பட போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரை வாங்கி, உயர்பதவிகள் கிடைத்து முன்னேற்றப்பாதையில் செல்ல நல்ல தருணங்கள் உங்களை தேடி வரும். வாய்ப்புகள் ஒருமுறைதான் கதவை தட்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதை நீங்களே தட்டிக் கழித்து விடுவார்கள். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் உங்களால் முடியும் என்ற மன தைரியத்தோடு அந்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள். முயற்சி செய்தது தோற்றுப் போவதில் எந்த பிரச்சினையும் நமக்கு வரப்போவது கிடையாது. முயற்சியே செய்யாமல் வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க வேண்டாம். நினைத்தது நினைத்தபடி நடக்கும். எதிர்காலத்தில் கடன் சுமை படிப்படியாகக் குறையத் தொடங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களின் எதிர்பார்ப்பு இந்த வாரம் முழுமையாக நிறைவேற போகின்றது. உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனையிலிருந்து வெளிவர போகிறீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் பல வழிகளில் வந்து சேரும். வீட்டிலிருந்த மனக்குழப்பத்திற்கு விடிவுகாலம் பிறந்துவிடும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும். குழப்பமான சமயங்களில், சிக்கலான பிரச்சனைக்கும் கூட தெளிவான முடிவை எடுத்து, உங்களது வாழ்க்கையை சரியான பாதையில் பயணிக்க செய்வீர்கள். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு கொஞ்சம் அனுசரணையோடு சென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.