ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – டிசம்பர் 16 முதல் 22 வரை

Indha vara rasi palan

மேஷம்:

Aries zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். தெய்வ சிந்தனையில் ஆழ்ந்து புண்ணிய யாத்திரைகள் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். எந்த செயலை செய்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்பது நன்மை தரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. பொன், பொருள், ஆபரண சேர்க்கை மற்றும் வீடு, வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு அமையப் பெறும்.

ரிஷபம்:

Taurus zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு சுப விரயங்கள் பல நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். நீங்கள் நடக்குமா? நடக்காதா? என நினைத்த காரியம் நல்ல ஒன்று இனிதே நடந்தேறும். பகைவர்களின் தொல்லை இருந்தாலும் அவர்களிடம் இருந்து தற்போது விலகி இருப்பது தான் உங்களுக்கு நல்லது. தொலைதூர பயணம் மேற்கொள்ளும்போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து அதிலிருந்து புதிய பாதைகள் உருவாக காரணமாக இருக்கப் பெரும்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வாரமாக அமையப்போகிறது. விருந்து மற்றும் சுப காரியங்களில் கலந்து கொண்டு உற்சாகமடைவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிட்டும். எதிர்பார்த்தபடி தனவரவு இந்த வாரம் கிடைக்கப் பெறாததால் அதனை தடுப்பதற்கு வீண் செலவுகளை குறைப்பது அவசியமான ஒன்று. பணியிட மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படலாம். மனதை ஒரு நிலைப்படுத்தி இறை வழிபாடுகளில் நம்பிக்கை கொண்டால் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். உங்கள் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

கடகம்:

zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு லாபகரமான வாரமாக அமையப் போகிறது. எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்தபடி பணம் வந்து சேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப்பெறும். அரசு வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க பெறலாம். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொலைதூரப் பயணங்கள் லாபகரமாக அமையலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்கும் நேரமிது. எனவே ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

Leo zodiac sign

இந்தவாரம் எதிர்பாராத சிலரின் வருகையால் குதூகலம் அடைவீர்கள். ஊதிய உயர்வு, வியாபாரத்தில் முன்னேற்றம் போன்றவற்றினால் ஏற்ற காலமாக அமையும் வாரம் இது. இறை வழிபாடுகளில் மனதை செலுத்தி வெற்றிக்கனியை பறிக்க போகிறீர்கள். உற்றார், உறவினர்களிடம் உங்களின் மரியாதை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் சிலருக்கு அமையப் பெறும். மன அமைதிக்காக சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருப்பீர்கள். உங்களின் தனித்திறமைகள் வெளியில் வர சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகிறார்கள்.

கன்னி:

Virgo zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு ஏற்றம் தரும் வாரமாக அமையப்போகிறது. உங்களின் முயற்சிகள் அனைத்தும் வீண் போகாமல் அனைவரும் பாராட்டும்படி வெற்றியை காண்பீர்கள். உயரதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் தேவையற்ற அனாவசியமான செலவுகளில் கவனம் தேவை. இறைவழிபாடு மூலம் உற்சாகம் அடைவீர்கள். புதிய வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கப்பெறும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்:

Libra zodiac sign

இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையப் பெறும். உத்தியோகத்தில் பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது ஏற்றமாக அமையப்பெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடின்றி வாழ விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சுப விரயங்கள் ஏற்படும் வாரமிது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனமாக இருப்பது நல்லது. முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு சுபச் செய்திகள் அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்திகள் வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான முதல் படியை எடுத்து வைப்பீர்கள். குழந்தை இல்லையே என்று கவலைப்பட்டு இருந்தவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கப் பெறும். இதுவரை வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருந்த உங்களுக்கு சற்று விடிவுகாலம் பிறக்கும். பிள்ளைகளால் நற்பெயர் உண்டாகும் நேரமிது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். உறவினர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

தனுசு:

Sagittarius zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு புதிய முயற்சிகள் மூலம் லாபகரமாக அமையப்போகிறது. உங்கள் இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாரம் முழுவதும் வீண் அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகளும் ஏற்படலாம். சிக்கனமாக இருப்பது நன்மை தரும். நீண்டநாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியமன்று நடைபெற இருக்கிறது.

மகரம்:

Capricornus zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவுகளால் திக்குமுக்காடிப் போவீர்கள். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல புதிய உத்திகளை கையாள போகிறீர்கள். கோபத்தால் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடலாம் எனவே நிதானத்தை கடைபிடியுங்கள்.

கும்பம்:

Aquarius zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராதவர்களின் வரவால் மன மகிழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. மகான்களின் ஆசி ஒருசிலருக்கு கிடைக்கப்பெறும். வேலை இல்லையே என்று தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமைய போகிறது. சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய வாரமிது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை தேவைப்படலாம். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. பொன் பொருள் சேர்க்கை அதிகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. பகைவர்களிடம் இருந்து ஏற்படும் தொல்லைகளிலிருந்து தப்பிக்க வார்த்தைகளை சரியான முறையில் உபயோகிப்பது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க பாருங்கள்.

மீனம்:

Pisces zodiac sign

இந்த வாரம் முழுவதும் அலைச்சல் தரும் வாரமாக அமையப்பெறும். எனினும் நல்ல காரியங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் நிலை உண்டாகும். உயர் பதவிகள் ஒரு சிலருக்கு கிடைக்கப்பெறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. ஆன்மீக சுற்றுலா சென்று வருவது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். அந்நியர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். அதனால் புதிய தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.