எந்த திதியில் பிறந்தவர்கள் எதை நைவேத்தியம் வைத்து இறைவனை வழிபட்டால் விரும்பிய பலனை பெறலாம் தெரியுமா?

vazhipadu
- Advertisement -

இறைவனின் அருளால் நமக்கு கிடைக்கின்றவற்றை நாம் வழிபடும் இஷ்ட தெய்வத்திற்கோ அல்லது குலதெய்வத்திற்கோ சமர்ப்பணம் செய்து வழிபடுவது ஆன்மீகத்தில் ஒரு உயர்வான செயலாகும். மேலும் நமக்கு கிடைத்தவற்றை தெய்வங்களுக்கு சமர்ப்பிப்பதால், அந்த தெய்வங்கள் அகமகிழ்ந்து நன்மையான பலன்களை நமக்கு அளிப்பர் என்பது அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் வாக்காகும். அந்த வகையில் நாம் பிறந்த திதி படி எந்த வகையான நைவேத்திய பொருட்களை இறைவனுக்கு வைத்து வழிபட்டால் விரும்பிய பலனை பெறலாம் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக கனிகள், உணவு பண்டங்கள், புத்தாடைகள், தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரண பொருட்கள் ஆகியவற்றை இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபடுவார்கள். இவற்றில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும் உணவுப்பொருட்களை நைவேத்தியம் என கூறுவார்கள்.

- Advertisement -

அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை காலம் என்பது அறிந்த ஒன்று தான். நிச்சயமாக நாம் அனைவரும் இதில் ஏதாவது ஒரு திதியில் தான் பிறந்திருப்போம். நாம் பிறந்த திதிக்கு ஏற்ப நாம் இறைவனுக்கு வைத்து வழிபடவேண்டிய நைவேத்திய பொருட்கள் இதோ:

பிரதமை திதி அன்று பிறந்தவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்க்கு நாட்டு பசுமாட்டு பாலிலிருந்து பெறப்பட்ட உயர்தரமான பசுநெய் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். துதியை திதி அன்று பிறந்தவர்கள் இறைவனை வழிபடும் பொழுது சர்க்கரை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

திருதியை திதி அன்று பிறந்தவர்கள் நாட்டு பசு மாட்டிடமிருந்து கறக்கப்பட்ட பால் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். சதுர்த்தி திதியன்று பிறந்தவர்கள் பட்சணம் தயார் செய்து இவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

பஞ்சமி திதியன்று பிறந்தவர்கள் தெய்வத்திற்கு வாழைப்பழங்கள் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சஷ்டி திதி அன்று பிறந்தவர்கள் இறைவழிபாட்டின் பொழுது தூய்மையான மலைத்தேன் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

சப்தமி திதி அன்று பிறந்தவர்கள் தாங்கள் இறைவனை வழிபடுகின்ற பொழுது வெல்லம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். அஷ்டமி திதியன்று பிறந்தவர்கள் இறை வழிபாடு செய்யும் பொழுது தேங்காய் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

நவமி திதியில் பிறந்தவர்கள் தெய்வங்களை வழிபடும் போது நெல்பொரி நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன் உண்டு. தசமி திதியில் பிறந்தவர்கள் தெய்வத்தை வணங்கும் பொழுது கருப்பு எள் நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு.

ஏகாதசி திதி அன்று பிறந்தவர்கள் சுத்தமான நாட்டு பசு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். துவாதசி திதியில் பிறந்தவர்கள் இறை வழிபாடு செய்கின்ற பொழுது அவல் நைவேத்தியம் படைத்து வழிபடுவது நன்று.

திரயோதசி திதியில் பிறந்தவர்கள் தெய்வங்களை வழிபாடு செய்கின்ற பொழுது கடலைகளை நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் இறைவனை வழிபடுகின்ற பொழுது சத்துமாவு நைவேத்தியம் படைத்து வழிபட்டால் சிறப்பு.

பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் பிறந்தவர்கள் பாயசம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -