இந்த வாரம் அமாவாசையை அடுத்து வரும், சூரிய கிரகணத்தன்று, முன்னோர்களின் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்? இப்படி செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

grahanam-tharpanam

பொதுவாகவே நம்முடைய சாஸ்திரத்தில் தர்ப்பணம் என்பது, தவிர்க்க கூடாத ஒன்று. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த வரிசையில், குறிப்பாக இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தர்ப்பணம் செய்யவேண்டும் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்லி இருக்கின்றது. தமிழ் மாதத்தின் முதல் தேதியான நேற்று(15.06.2030), தற்பணம் கொடுத்திருக்க வேண்டும். சில பேர் வீடுகளில் இந்த பழக்கம் இருக்கும். அடுத்ததாக வரப்போகின்ற அமாவாசை தினத்தன்று (20.06.2020), சனிக்கிழமை நாம் எல்லோரும் வழக்கம் போல முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

tharpanam

அமாவாசைக்கு அடுத்து தினமான, ஞாயிற்றுக்கிழமை அன்று, (21.06.2020) சூரிய கிரகணம் வருகின்றது. இந்த கிரக சமயத்தின் போது, சாஸ்திரப்படி கிரக தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது நம்மில் பல பேருக்கு அறியப்படாத ஒரு சாஸ்திரமாக இருந்தாலும், இந்த கிரக காலத்தில் தற்பணம் கொடுப்பதன் மூலம், நம் பித்ருக்களின் தோஷம் நீங்கும் என்றும், அவர்களுடைய ஆசீர்வாதத்தை விரைவாக, முழுமையாக பெற முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் இருந்தாலும், முறையாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத பட்சத்தில், முன்னோர்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து, அவர்களின் திருவுருவப் படத்திற்கு முன்பாக படைத்து, முதலில் காகத்திற்கு சாதம் வைத்து விட்டு, அதன் பின்பு, நீங்கள் சாப்பிடுவது நல்ல பலனை தரும்.

crow feeding

உங்களால் முடிந்தால் வயது முதிர்ந்த யாரேனும் ஒருவருக்கு வயிறார சாப்பாடு வாங்கித் தரலாம். அல்லது இன்னும் வசதி படைத்தவர்கள் ஆசிரமங்களில், அன்னதானம் செய்வது மிகப் பெரிய பலனை தேடித்தரும். இதன் மூலம் பித்ரு தோஷம், பித்ரு சாபம், போன்ற பல தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்க வீட்டில், நீண்ட நாட்களாக சுபகாரியத் தடை இருந்தாலும், இந்த கிரகண காலத்திலும், அமாவாசை தினத்திலும், செய்யக்கூடிய அன்னதானமும், தர்ப்பணமும் அந்த தடைகளை தகர்த்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

surya-grahanam

இதோடு மட்டுமல்லாமல் நம் குடும்பம் எந்த ஒரு கெட்ட சக்தியின் பிடியிலும் சிக்கிக்கொள்ளாமல் நம்முடைய, முன்னோர்கள் பாதுகாப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் வீட்டு முன்னோர்களை நினைத்து இந்த அமாவாசை திதி யோடு சேர்த்து, கிரகண தர்ப்பணத்தையும் தவறாமல் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தோல்வி என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. விநாயகருக்கு 3 வாரங்கள் இந்த தீபம் ஏற்றினால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Munnorgal sabam neenga. Munnorgal sabam. Munnorgal sabam theera. Munnorgal sabam in Tamil. Thithi in Tamil.