இந்த முறைப்படி ஒரு முறை வீட்டிலேயே ஃபேஷியல் செய்து பாருங்கள்.

coffee facial
- Advertisement -

எங்காவது விசேஷங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் ஃபேஷியல் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதிலும் ஒரு முறை மட்டும் ஃபேஷியல் செய்வதற்கு பதிலாக பியூட்டி பார்லர் இருப்பவர்கள் பலமுறை வரச் சொல்வார்கள். காரணம் அவர்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக. அது புரியாமல் நாம் மேலும் அழகாக போகிறோம் என்ற ஆசையில் பலரும் பணத்தை செலவு செய்து நேரத்தையும் செலவு செய்து பியூட்டி பார்லருக்கு செல்வார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் அப்படி எந்தவித சிரமமும் படாமல் வீட்டில் இருக்கக் கூடிய எளிய பொருட்களை வைத்து அற்புதமான ஃபேஷியல் செய்யும் முறையை பார்க்கப் போகிறோம்.

ஃபேஷியல் செய்வதற்கு இயற்கையிலேயே நமக்கு பல பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் முறையாக பயன்படுத்தினாலே நம்முடைய அழகை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது தான் உண்மை. இந்த பதிவில் நாம் சொல்லக்கூடிய ஃபேஷியல் உபயோகப்படுத்தப்படும் பொருள்தான் நாம் அன்றாட உபயோகப்படுத்தும் காபித்தூள். காபித்தூளை வைத்து ஃபேஷியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

ஃபேஷியல் என்றால் முதலில் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்க வேண்டும். பிறகுதான் முகத்திற்குரிய பேக்கை போட வேண்டும். இதைத்தான் ஃபேஷியல் என்று கூறுகிறோம். அப்படி இருந்த செல்களை நீக்குவதற்கு இரண்டு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் உடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை, தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் இவை மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி இரண்டு நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களும், சூரியன் கதிர்களால் ஏற்பட்ட நிற மாற்றமும் நீங்கும்.

- Advertisement -

அடுத்ததாக ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு ஒரு ஸ்பூன் காபித்தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும்பால், எலுமிச்சம் பழச்சாறு ஒரு ஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

காபித்தூளில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஸ்கின் ரிப்பேரிங் ஏஜென்ட் இருப்பதால் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி முகத்திற்கு இயற்கையிலேயே ஒரு பொலிவை கொடுக்கிறது. மேலும் தேனில் இருக்கக்கூடிய ஈரத்தன்மை முகத்தை மென்மையாகவும் அதேசமயம் வெண்மையாகவும் மாற்ற உதவுகிறது.

- Advertisement -

பசும்பால் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்க உதவுகிறது. எலுமிச்சை கிருமி நாசினியாக செயல்பட்டு பருக்கள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. சர்க்கரை முகத்தை ஸ்கிரப் செய்வதற்காக இறந்த செல்களை நீக்குவதற்காக பயன்படுத்துகிறோம். தேங்காய் எண்ணெய் நல்ல மாய்ஸ்சராக பயன்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் செம்பருத்தி ஷாம்பு.

இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய இந்த அற்புதமான பொருட்களை வைத்து பியூட்டி பார்லர் செல்லாமல் எந்த வித கெமிக்கலையும் உபயோகப்படுத்தாமல் நம்முடைய முகத்தை பொலிவாகவும், மென்மையாகவும், வெண்மையாகவும் மாற்ற முடியும்.

- Advertisement -