இரவில் நிம்மதியான தூக்கம் வர இந்த ஒரு இலையை தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு தூங்கி பாருங்கள், ஜம்முன்னு தூக்கம் வரும். இது தெரியாமையா தூக்கம் வராமல் இவ்ளோ நாள் தவிச்சோம்னு யோசிக்க போறீங்க!

- Advertisement -

எல்லோருக்குமே இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் என்பது ரொம்பவும் முக்கியம். அது தான் மறுநாளைய உற்சாகத்திற்கு அடிகோலாக இருக்கிறது, ஆனால் இன்று பெரும்பாலும் மொபைல் போனுக்கு அடிமையாகி போனதால் இரவில் சரியான நேரத்திற்கு உறங்க முடியாமல், காலையில் சுறுசுறுப்பாக எந்திரிக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர். இந்த இரவு நேர தூக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும்? ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு எளிய வழிமுறை என்ன? என்பதை ஆன்மீக குறிப்பு தகவலாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் என்பது 11 மணியிலிருந்து ஆரம்பித்து காலை 5 மணி வரையிலும் நீடிக்கும் ஒரு இயல்பான செயலாகும் ஆனால் இது நம் தூங்கும் நேரத்தை பொறுத்து மாறுபட்டு விடுகிறது. பதினோரு மணிக்கு தான் படுக்கைக்கு பலரும் இன்று செல்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது ஆழ்ந்த தூக்கம் எந்த நேரத்தில் வரும்? அது எந்த அளவிற்கு நீடிக்கிறதோ, அந்த அளவிற்கு உங்களுடைய உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். ஆனால் குறைந்த நேர ஆழ்ந்த உறக்கம் என்பது உற்சாகத்தை மட்டும் அல்லாமல் உடல் நிலையும் பாதிக்கும்.

- Advertisement -

ரெண்டு நாளைக்கு சரியான நேரத்திற்கு தூங்கி, சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்து பாருங்கள், அன்றைய நாள் முழுவதும் வித்தியாசமான ஒரு உற்சாகத்தை உங்களால் உணர முடியும். இது தொடர்ந்து ஒருவருக்கு கிடைத்தால் தான் ஆயுளும் நீடிக்கும், மேலும் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றியையும் அடைய முடியும். இப்படிப்பட்ட ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்க ஆன்மீக ரீதியாக ஒரு சில வழிமுறைகள் உண்டு. அதிலும் தாவர வகைகளில் சில இலைகள் ஆழ்ந்த உறக்கத்தை தருபவையாக இருந்து வருகிறது.

பொதுவாக பெண்கள் மல்லிகை பூவை விரும்பி சூடி கொள்வது வழக்கம். அப்படி சூடிக் கொள்ளும் பெண்களுக்கு தலைவலி வந்தால் மல்லிகை பூவை தவிர்ப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மல்லிகை பூவின் வாசம் தலைவலியை உண்டாக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அதனால் தலைவலி இருக்கும் பொழுது பெண்கள் மல்லிகை பூச்சூடுவதில்லை! ஆனால் இந்த மல்லிகையின் இலைகள், அதனுடைய வாசம், தன்மை நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அதிர்வலைகளை உண்டாக்கும்.

- Advertisement -

மல்லிகை பூவின் இலைகளை சிறிதளவு பறித்து அதை ஒரு மெல்லிய துணியில் போட்டு தலையணை போல சிறிய அளவில் கட்டிக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய படுக்கை அறையில் நீங்கள் தூங்கும் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். இது போல தொடர்ந்து செய்து வர ஆழ்ந்த தூக்கம் என்பது உங்களுக்கு வர செய்துவிடும். நீங்கள் என்னதான் தூக்கத்தை தவிர்க்க நினைத்தாலும், இது உங்களை தூக்க நிலைக்கு கொண்டு செல்லும் அற்புத மருந்தாக செயல்படும்.

இதையும் படிக்கலாமே:
அரச மரத்தடியில் இந்த விளக்கை ஏற்றி வைத்தால், அசுர வேகத்தில் உங்கள் கடன் குறையும். அசுர வேகத்தில் உங்கள் கையில் பணம் சேர தொடங்கிவிடும்.

மல்லிகை பூவின் இலைகள் காய காய நீங்கள் அதை பிரஷ்ஷாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இலைகள் பச்சையாக இருக்கும் பொழுது தான் அதன் வாசம் தூக்கத்தை வரவழைக்கும் தன்மையுடன் இருக்கும். அது காய ஆரம்பித்தால் அதனுடைய வாசமும் மாறிவிடும். இதனால் தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றலும் நீங்கிவிடும் எனவே அவ்வப்போது நீங்கள் மல்லிகை இலைகளை மாற்றி விட வேண்டும். மல்லிகை இலைகள் மட்டுமல்ல, மருதாணி இலையையும் நீங்கள் இப்படி செய்யலாம் நல்ல உறக்கம் வரும்.

- Advertisement -