இரவில் தூக்கமின்மை பிரச்சனை நீங்க மிக எளிய யோக முத்திரை

Thookam-vara

ஒரு மனிதனுக்கு உயிர் வாழ உணவு எப்படி முக்கியமோ அதுபோல அவனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சரியான தூக்கம் அவசியம். ஆனால் இன்று மன அழுத்தம் மிக்க பணிசூழல்களால் பலரும் சரியான தூக்கமின்றி அவதியுறுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கான முத்திரை தான் இது.

muthirai

முத்திரை செய்யும் முறை:
முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள மோதிர விரல்கள் மற்றும் சுண்டு விரல்களின் நுனிகளை மேலே உள்ள படத்தில் காட்டியவாறு ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். மீதி விரல்களை மேலே உள்ள படத்தில் காட்டியவாறே மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் தினமும் இம்முத்திரையை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

Thiyanam

பலன்கள்:

இம்முத்திரையை தொடர்ந்து செய்து வருவதால் தூக்கமின்றி அவதிப்பட்டவர்களுக்கு நன்கு உறக்கம் வரும். மனம் மற்றும் உடலில் இருக்கும் படபடப்பு குறையும்.மன அழுத்தம் மற்றும் கோப உணர்ச்சிகள் குறையும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

இதையும் படிக்கலாமே:
ஞாபக மறதி நீங்க இதை செய்தாலே போதும்

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், யோக ஆசனங்கள் மற்றும் பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.