தொப்பைக்கு மேலே இந்த எண்ணெயை மட்டும் கொஞ்சம் தடவிப் பாருங்கள். தொப்பை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

thoppai
- Advertisement -

தொப்பை மட்டும் என்றில்லை, தொப்பை அல்லாமல் அதாவது வயிற்றுப்பகுதி அல்லாமல், சில பேருக்கு கை பகுதிகளில், தொடைப் பகுதிகளில், பிட்டம் என்று சொல்லப்படும் பின் பகுதிகளில் கூட அதிகப்படியான சதை இருக்கும். அதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி பார்த்திருப்பார்கள். உடற்பயிற்சியும் செய்து பார்த்திருப்பார்கள். டயட்டில் இருந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் தேவையற்ற இடங்களில் இருக்கும் சதையை குறைக்க முடியாமல் கஷ்டமாக இருக்கும். சில பெண்களுக்கு டெலிவரிக்கு பிறகு வயிறு பகுதி ரொம்ப பெரியதாக இருக்கும். ஆனால் உடல் பார்ப்பதற்கு ஒல்லியாக தான் இருக்கும். இப்படிப்பட்டவர்களும் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம்.

தேவையற்ற இடங்களில் இருக்கும் சதையை குறைக்க நாம் பயன்படுத்தப் போகும் எண்ணெய் கடுகு எண்ணெய். நிறைய டிபார்ட்மென்டல் ஸ்டோரில் இந்த கடுகெண்ணெய் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்ய வேண்டும். எண்ணெயை கொதிக்க கொதிக்க சூடு செய்ய வேண்டாம். கை பொறுக்கும் சூடு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

- Advertisement -

வெதுவெதுப்பான இந்த எண்ணெயைத் தொட்டு எந்த இடத்தில் உங்களுக்கு சதைப்பகுதி உடம்பில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் மசாஜ் செய்யவேண்டும். ஜென்டிலாக அழுத்தம் கொடுக்காமல், வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் கொடுங்கள். நம்முடைய உடம்பில் கண்ணுக்கே தெரியாத துவாரம் இருக்கும் அல்லவா. அதனுள்ளே எண்ணெய் நன்றாக உறிஞ்ச பட வேண்டும். 3 லிருந்து 4 நிமிடம் போல எண்ணெயை தேய்த்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த எண்ணெயை எப்போது வேண்டும் என்றாலும் தேய்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த எண்ணெயை தேய்த்து முடித்துவிட்டு நீங்கள் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும். அது உடற்பயிற்சி ஆக இருக்கலாம். அல்லது வீட்டு வேலையாக கூட இருக்கலாம். ஆனால் எண்ணெய் தேய்த்து முடித்தபின்பு உங்களுடைய உடம்பில் வியர்வை சுரக்கும் படி ஏதாவது ஒரு வேலையை செய்யுங்கள். வாக்கிங் போனால் கூட தவறு கிடையாது.

- Advertisement -

அதன்பின்பு உங்களுடைய உடம்பில் இந்த எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மை இருக்கும் என்று நினைத்தால் நீங்கள் குளித்து விடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு துணியை வைத்து துடைத்து எடுத்து கொள்ளலாம். 20 லிருந்து 25 நாட்கள் தொடர்ந்து இதை செய்து பாருங்கள். நிச்சயமாக தேவையற்ற சதைப்பகுதி குறைந்து இருப்பதில் வித்தியாசம் தெரியும்.

இதோடு முடிந்துவிடவில்லை. இந்த எண்ணெயை தடவி தேவையற்ற சதைகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, பின் சொல்லக்கூடிய விஷயங்களையும் நீங்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த பண்டங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் வேகவைத்து தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்து நிறைந்த பொருட்களை குறைத்துக் கொள்ளவேண்டும். அதாவது கார்போஹைட்ரேட் நிறைந்த பொருட்களை சாப்பிடக்கூடாது. இரவு அளவோடு சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட வேண்டும்.

வேக வைத்த காய்கறிகள், தானிய வகைகள், சிறு தானிய வகைகள், பழ வகைகள், நட்ஸ் வகைகள் இவைகளை அளவோடு சீராக சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமும் கெட்டுப் போகாது. அதேசமயம் உடல் எடையும் குறைய தொடங்கும். மேலே சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தால் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -