தொப்பை குறைய பாட்டி வைத்தியம்

Thoppai-kuraiya

தொப்பை என்பது இன்றைய இளஞ்சர்கள் பலருக்கும் பெரும் கவலையை விளைவிக்கிறது. உட்கார்ந்த இடத்திலே வேலை செய்வது, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பது, சரிவர தூங்காதது, உடலுக்கு வேலை கொடுக்காதது, மது அருந்துவது போன்ற பல காரணங்களால் தொப்பை வர வாய்ப்புள்ளது. தொப்பையை குறைக்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

wight loss

தொப்பை குறைய எளிய வழிகள் – குறிப்பு 1 :

நம்மில் பலர் இனிப்பிற்காக சக்கரை சேர்ப்பது வழக்கம். சக்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது. ஆகையால் சக்கரைக்கு பதிலாக சுத்தமான தேனை உபயோகிப்பதன் மூலம் தொப்பை குறையும்.

தொப்பை குறைய குறிப்பு 2 :
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சையை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூன்று பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின் பூண்டு பற்களை அகற்றி விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் விரைவில் தொப்பை குறையும்.

தொப்பை குறைய குறிப்பு 3 :
50 கிராம் கொள்ளை 750 மில்லி தண்ணீரில் முந்தய நாள் இரவே ஊற வைத்து, அதிகாலையில் எழுந்து அதை வேகவைத்து வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை விரைவில் குறையும். இது சிலருக்கு உஷ்ணத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Kollu

- Advertisement -

தொப்பை குறைய குறிப்பு 4 :
அருகம்புல் சாறு என்பது எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு நல்ல தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும் எடையும் குறிக்கும்.

arugampul juice

தொப்பை குறைய குறிப்பு 5 :
இஞ்சி சாறோடு நெல்லிக்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். இது தொப்பை குறைய எளிய வழி ஆகும்.

Inji and lemon juice

தொப்பை குறைய உணவுகள்

தயிர்
தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடல் பலவகையிலும் நன்மைகளை பெறுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது செரிமான திறன் நன்றாக இருந்தாலே வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. தயிரை தினமும் உண்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

thayir

தர்பூசணி
தர்பூசணி பழம் எப்போதும் கிடைப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் இந்த பழம் அதிக அளவில் கிடைக்கும். அந்த சமயங்களில் தர்பூசணியை தேவைக்கேற்ப சாப்பிடுவது நல்லது. இதை உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். அதன் காரணமாக நீர் கோர்ப்பு உள்ளிட்டவை குறைந்து உடல் ஒரு சரியான வடிவத்தை பெற தர்பூசணி பெரிதும் உதவுகிறது.

water melon

எலுமிச்சை சாறு:
நமது தமிழர் கலாச்சாரத்தின் படி பழங்காலம் முதலே எலுமிச்சை சாறை பல வகையிலும் பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் மும்பாக எலுமிச்சை சாறை குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். இதனால் தொப்பை தானாக குறையும்.

orange and lemon

வெண்ணெய் பழம்:
வெண்ணை பழம் என்றொரு பழ வகை உள்ளது. இதை ஆங்கிலத்தில் அவோகேடோ என்பார்கள். இந்த வெண்ணை பழத்தை உண்பதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு வயற்றில் வாயுத்தொல்லை உருவாவதை இந்த பழம் தடுக்கிறது.

avocado

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், கீரை, இளநீர், மாதுளை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தொப்பை குறையும்.

இதையும் படிக்கலாமே:
பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

தொப்பை குறைய எளிய வழிகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தொப்பையை குறைக்கலாம். அதோடு தினமும் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் தொப்பை குறையும்.

வீடியோ :

English Overview:
Here we have Udal Thoppai Kuraiya tips in Tamil. It is also called as Thoppai kuraiya patti vaithiyam in Tamil or Thoppai kuraiya Nattu maruthuvam in Tamil. We have 10 tips above.