எந்த லிங்கத்தை வழிபட்டால் என்ன தோஷம் விலகும் தெரியுமா ?

Siva Lingam

பொதுவாக சிவனை வழிபட்டால் எத்தகைய தோஷங்களும் விலகும் என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் குறிப்பிட்ட சில தலங்களில் உள்ள சிவ லிங்கத்தினை வழிபடுவதன் மூலம் நமக்கான தீர்வை எளிதில் பெறலாம். அந்த வகையில் எந்த வகை தோஷங்களுக்கு எந்த தலத்தில் உள்ள சிவனை வழிபடலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

siva lingam

நிலம், மனை சம்மந்தமான பிரச்சனைகள் தீர – திருச்சுழி திருமேனிநாதர்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி என்னும் ஊரில் அமைந்துள்ளது திருச்சுழி திருமேனிநாதர் கோவில். ஒரு சமயம் மிகப்பெரிய பிரளயம் ஒன்று வந்தபோது சிவ பெருமான் அந்த பிரளயத்தை சுழுத்தி பூமிக்குள் புகச் செய்ததால் இந்த இடத்திற்கு திருச்சுழி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தில் விளைச்சல் பிரச்சனை, நாம் தங்கி இருக்கும் மனையில் ஏதாவது பிரச்சனை என நிலம் மற்றும் மனை சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வை காணலாம்.

lingam

பிரச்சனை உள்ள நிலத்திலோ அல்லது மனையிலோ இருந்து ஒரு கை பிடி மண்ணை எடுத்துக்கொண்டு வந்து இந்த கோவிலில் வைத்து, அந்த மண்ணில் உள்ள பிரச்சனைகள் யாவையும் தீர்த்து வைக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டு பின் அந்த மண்ணை மீண்டும் நம் நிலத்தில் கலந்துவிட்டால் அந்த நிலத்தில் உள்ள பிரச்சனைகள் யாவும் தீர்ந்து விடும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

புத்திர தோஷம் நீக்கும் புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த கோவில். அகத்தியரே தன் கைகளால் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட, சிவனும் பார்வதி தேவியும் இங்கு திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி தந்துள்ளனர். பல சிறப்புக்கள் மிக்க இந்த கோயிலிற்கு தொடர்ந்து 6 பிரதோஷ தினத்தன்று வந்து சிவனையும் அம்பிகையையும் வழிபட்டால் புத்திர தோஷங்கள் விலகி குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அதோடு குழந்தை பேரு பெற்றவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தங்கள் குழந்தைகள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வார்கள் என்றும் நம்பப்படுகிறது.

lingam

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் திருச்சேறை ருணவிமோசனர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருச்சேறை என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த கோவிலில் மூலவராய் வீற்றிருக்கிறார் ஸ்ரீருண விமோசனர். ருணம் என்றால் கடன் என்று பொருள். மார்கண்டேயனின் கதை பற்றி நாம் அறிந்ததே. ஒரு சமயம் மார்க்கண்டேயன் இங்கு வந்து சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தன் பிறவிப்பிணி நீங்க இறைவனை போற்றி வழிப்பட்டாராம். அந்த லிங்கமே ஸ்ரீருண விமோசனர் லிங்கம் என்று கூறப்படுகிறது. இம்மை மறுமைக்கான கடன்களும் பல நாட்களாக தீராத கடனும் இங்குள்ள சிவ லிங்கத்தை வழிபட்டால் தீரும் என்பது நம்பிக்கை.

badavi lingam

பிணிகள் நீங்கும் குடவாசல் கோநேசர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைத்துள்ளது குடவாசல் என்னும் ஊர். இங்குள்ள கோநேசர் கோவிலை கருடனே கட்டியதாக நம்பிக்கை. இங்குள்ள சிவபெருமானை வழிபடுவதன் பயனாக உடல் பிணிகளும் உள்ளப்பிணிகளும் அதாவது மன கஷ்டங்களும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

sivan

இதையும் படிக்கலாமே:
ஒருவர் செய்யும் எந்தெந்த பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது தெரியுமா ?

ராகு தோஷங்கள் நீக்கும் கீழத் திருவேங்கடநாதபுரம் கயிலாசநாதர்

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது குன்னத்தூர் என்னும் இடம். இங்கு அமைந்துள்ளது கயிலாசநாதர் ஆலயம். ராகுவின் சிறப்போடு விளங்கும் இந்த தளமானது தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது. திருமண தடை, நாக தோஷம், ராகு தோஷம், குழந்தை பேரு பெறுவதில் தடை போன்ற தோஷங்கள் இங்கு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதன் பலனாக விலகும் என்பது நம்பிக்கை.