உங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட சனி தோஷம், ராகு கேது தோஷம் இருந்தாலும், அதனுடைய தாக்கம் உடனே குறையும். இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும்.

hanuman

ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உங்களுக்கு ஜாதகப்படி கெட்ட நேரம் தொடங்கி விட்டது, சனி பகவானாலும், ராகு கேதுவினாலும் பிரச்சனை வரப்போகிறது என்று தெரிந்தால், அதை நினைத்து பயப்பட வேண்டாம். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தாலும், பொய் சொல்லாமல் நேர்மையாக உங்கள் வாழ்க்கையை வாழ்ந்து விட்டாலே, பிரச்சனையிலிருந்து பாதி,  தப்பித்துக்கொள்ளலாம்.

sani-baghavan

பிரச்சினை வரப்போகிறது. இதை செய்தால் பிரச்சினை ஆகிவிடும். இந்த உண்மையை வெளியில் சொன்னால் மாட்டிக் கொள்வோமோ! என்று நினைத்து தப்பித்தவறி கூட உண்மையை மறைத்து விடாதீர்கள், அப்போது தான் பிரச்சனையே, நிஜத்தில் ஆரம்பிக்கும். முடிந்தவரை நேர்மையாக இருந்துவிட்டால், சனிபகவானால் உண்டாகக்கூடிய கஷ்டங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

இதோடு சேர்த்து கட்டாயம் இறைவழிபாடும் நமக்கு அவசியம் தேவை. ராகு கேது பிரச்சினையாக இருந்தாலும், சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும், அவர்களிடமிருந்து நாம் தப்பிப் பிழைக்க, அனுமனது பாதங்களைச் சரணடைவது தான் ஒரே வழி. என்ன செய்வது? அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன், அஞ்சா நெஞ்சம் படைத்த ஆஞ்சநேயர், எவருக்கும் எதற்கும் அஞ்சாதவர் ஆயிற்றே!

rahu

ஆஞ்சநேயர் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கர்ம வினைகளும், துன்பங்களும் நிச்சயமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு வாழ்க்கையில் எப்பேர் பட்ட கஷ்டம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய அனுமனது மூல மந்திரத்தை தினந்தோறும் ஐந்து முறை உச்சரித்தால் கூட, அபரிமிதமான பலனை நம்மால் பெற முடியும். உங்களுக்கான ஹனுமனின் மூல மந்திரம் இதோ!

- Advertisement -

அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசயா
ஹனுமந்த முபாஸ் மஹே!

hanuman-sivan

நான்கு வரி மந்திரம்தான். தீராத துயரங்கள் சீக்கிரமே தீரவேண்டும், என்று காலையில் கண்விழித்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்து அதன் பின்பு, இந்த நான்கு வரி மந்திரத்தை உச்சரித்து, ஹனுமனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மந்திரத்தை உச்சரிக்கும் எண்ணிக்கை என்பது உங்களுடைய இஷ்டம் தான்.

hanuman

இந்த மந்திரத்தை உச்சரித்து அனுமனை தொடர்ந்து வழிபாடு செய்து வருபவர்களை எந்த கிரக தோஷமும் எதுவும் செய்யாது. எவ்வளவு நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் துயரங்கள் குறைந்து கொண்டே வரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இந்த மரம் இருந்தால் கார்த்திகை மாதத்தில் வீட்டிற்கு வருபவர்களுக்கு இதை தானமாக கொடுத்து அனுப்புங்கள் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.