தொழிலில் படு நஷ்டம், தொழில் சாஷ்டாங்கமாக படுத்து விட்டது. இனிமேல் இந்த தொழிலை செய்தால், தலையில் போட துண்டு கூட மிஞ்சாது என்ற நிலைமையில் உங்களுடைய தொழில் போய்க்கொண்டிருக்கிறதா. தொழிலை விட்டு முழுமையாக வெளிவர வேண்டும் என்று நினைக்கிறேன், கொஞ்சம் 9 வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பிறகு உங்களுடைய முடிவை எடுத்துக் கொள்ளலாம். நஷ்டத்தில் இருக்கும் தொழிலை, லாபகரமாக மாற்றக்கூடிய எளிமையான தாந்திரீகம் சொல்லும் ஆன்மீகம் பரிகாரம் இதோ உங்களுக்காக.
நஷ்டத்தில் இருக்கும் தொழில் லாபகரமாக மாற
யாரெல்லாம் தொழிலில் ஓஹோ என கொடிகட்டி பறக்க வேண்டும், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும், என்னுடைய தொழில் இருக்கும் கண் திருஷ்டி எல்லாம் அழிய வேண்டும், எதிரி பிரச்சனை எல்லாம் அழிய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு இந்த பரிகாரம் சமர்ப்பணம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஐந்து எலுமிச்சம் பழம் வாங்கி, அதை இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாதியில் மஞ்சள், ஒரு பாதையில் குங்குமம் தடவ வேண்டும். 10 எலுமிச்சம் பழ துண்டுகளில், 5 எலுமிச்ச பழ துண்டுகள் மஞ்சள் தடவியும், 5 எலுமிச்சம் பழத் துண்டுகள் குங்குமம் தடவியும் இருக்கட்டும்.
இதை அப்படியே ஒரு பாட்டிலில் போட்டு விடுங்கள். அதே பாட்டிலில் வெண்கடுகு 1 கைப்பிடி, மிளகு 9 போட்டு அப்படியே திறந்தபடி தொழிற்சாலையிலோ, கடையிலோ, வியாபாரம் செய்யும் இடத்திலோ வைத்து விடுங்கள். மறுநாள் காலை திங்கட்கிழமை வந்து முதல் வேலையாக இந்த பொருட்களை எல்லாம் ஒரு கருப்பு துணியில் கொட்டி மூட்டையாக கட்டி கடைக்கு ஒதுக்குப்புறமாக கொண்டு போய் ஒரு கற்பூரத்தை வைத்து இதை கொளுத்தி விட வேண்டும்.
நெருப்புக்கு இந்த பொருட்களை எல்லாம் இறை ஆக்கி விடுங்கள். இப்படி செய்தால் நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் இருக்கும் எதிர்மறையாற்றல் விலகும். கண் திருஷ்டி விலகும். வருமானத்தை தடை செய்யக்கூடிய கஷ்டங்களும் விலகும். சரியாக 9 வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்துவிட்டு, பிறகு உங்கள் தொழிலில் வரக்கூடிய லாபத்தை பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பு அதிகரிக்க வாஸ்து குறிப்பு
நிச்சயம் நீங்களே நம்ப மாட்டீங்க. இழுத்து மூடக்கூடிய அளவுக்கு இருந்த உங்களுடைய தொழில் வியாபாரம் ஓஹோ என கொடிக்கட்டி பறக்க தொடங்கிவிடும். நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள். ஒன்பது வாரம் கழித்து பிறகு உங்கள் மனதிற்கு பட்டதை நீங்கள் செய்து கொள்ளலாம். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காக இந்த எளிமையான தாந்திரீக பரிகாரம். எந்த பரிகாரம் செய்தாலும் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் தேவை. மனதில் குலதெய்வத்தை மனதார நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.