தொழில் செய்யும் இடத்தில் இதெல்லாம் இருந்தால் வருமானத்தை தடை செய்துவிடும்! இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்.

banana-tree-silanthi-valai-cash
- Advertisement -

வீட்டில் இருப்பது போலவே தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சில செடி, கொடிகள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்று வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். அது போல தொழில் செய்யும் இடங்களிலும் ஒருசில செடிகளை இப்படி வைத்திருந்தால் வருமானத்தை அதை தடை செய்து விடும் என்று கூறப்படுவது உண்டு. தொழில் செய்யும் இடத்தில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது? எது எதிர்மறை ஆற்றல்களை வெளியிட கூடியது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வியாபாரம், தொழில் போன்றவை செய்யும் இடங்களில் எப்பொழுதும் சுத்தமாக பளிச்சென வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் வாடிக்கையாளர்களை எளிதாக அது ஈர்க்கும். குறிப்பாக கடை வைத்திருப்பவர்கள், தொழில் செய்பவர்கள் சிலந்தி வலைகளை உங்களுடைய இடங்களில் இல்லாதவாறு அவ்வப்போது சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

- Advertisement -

முடிச்சுகள் நிறைந்துள்ள இந்த சிலந்தி வலைகள் வீட்டில் மட்டுமல்ல, தொழில் செய்யும் ஸ்தாபனங்களில் இருந்தால் செல்வ வளர்ச்சியை கண்டிப்பாக தடை செய்யும் என்று எச்சரிக்கிறது வாஸ்து சாஸ்திரம். சிலந்தி வலைகள் உருவாவதற்கு காரணமே அந்த இடத்தை அப்போது தான் நாம் சுத்தமாக வைத்திருப்போம் என்கிற ஒரு சூட்சுமமும் உண்டு. எட்டாத உயரத்திலும், சந்து, பொந்துகளில் உருவாகக்கூடிய இந்த சிலந்தி வலைகளை நாம் அகற்றினால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கத் துவங்கி விடும். இதனால் தான் அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

தொழில் செய்யும் இடங்களில் சிலந்தி வலைகள் இருப்பது தொழில் தடையை ஏற்படுத்தும். வியாபார விருத்தி குறைக்கும். அது மட்டும் இல்லாமல் தொழில் செய்யும் இடங்களில் இந்த செடி, கொடிகள் காய்ந்து இருந்தால் அதை அவ்வப்பொழுது நீக்கி விட வேண்டும். இல்லை என்றால் பணவரத்து, பணப்புழக்கத்தை அந்த இடத்தில் தடை செய்துவிடும் அபாயம் உண்டு. வெற்றிலை மற்றும் வாழை இலை போன்றவை தொழில் செய்யும் இடங்களில் இருந்தால் அது பச்சைப் பசேலென பசுமையாக இருக்க வேண்டும்.

- Advertisement -

வெற்றிலைக் கொடி மற்றும் வாழை மரத்தை வைத்திருப்பவர்கள் அதன் இலைகள் காய்ந்து இருந்தால் கண்டிப்பாக அந்த இலைகளை வெட்டி எடுத்து வீசி விடுங்கள். காய்ந்த இலைகள் இருக்கும் செடிகளை வளர்த்தால் அங்கு வருமானமும் காய்ந்து போகும் என்று கூறுவார்கள். இதனால் தொழிலில் உங்களுடைய முன்னேற்றத்தை தடை செய்துவிடும். தொழில் செய்யும் இடங்களில் மட்டுமல்ல, வீட்டிலும் காய்ந்த செடிகள், முட்கள் நிறைந்த செடிகள் மற்றும் களைச் செடிகள் போன்றவற்றை வளர்த்தால் அங்கு செல்வம் தடைப்படும். இதனால் குடும்பத்தில் வீண் விரையங்கள் ஏற்படும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது வந்த வழியே சென்று கொண்டே இருக்கும்.

உடைந்த சிலைகளையும், கண்ணாடி பொருட்களையும் கூட தொழில் செய்யும் இடங்களில் வைத்திருக்கவே கூடாது. இதுவும் தொழில் தடையை ஏற்படுத்தும் ஒரு அறிகுறியாகும். தெய்வ சிலைகள் குறிப்பாக சேதம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். தெய்வப் படங்கள், தெய்வ சிலைகள் உடைந்து இருப்பது தொழிற் தடை மற்றும் பண புழக்கத்தை குறைக்கும். அதை ஒட்ட வைத்துக் கூட பயன்படுத்த கூடாது. உடைந்தால் உடைந்தது தான்! உடனே அதை அப்புறப்படுத்தி விடுங்கள். காய்ந்த இலைகள், சிலந்தி வலைகள், குப்பை கூழங்கள், உடைந்த கண்ணாடிகள், உடைந்த தெய்வ சிலைகள், கூர்மையான இரும்பாலான அபாயம் நிறைந்த பொருட்கள் போன்றவற்றை தொழில் செய்யும் இடங்களில் பொதுவாக வைத்திருக்கக் கூடாது. இதெல்லாம் வருமானத்தை குறைக்கும் எனவே இருந்தால் அகற்றி விடுங்கள்.

- Advertisement -