தொழில் நன்றாக சிறந்து நடைபெறுவதற்கு செய்யக்கூடிய வழிபாடுகளும் தானமும்.

business
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் தொழிலும் ஒரு வகையில் காரணமாக அமைகிறது. பிறரிடம் வேலை பார்ப்பதை தவிர்த்து விட்டு சொந்தமாக தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய தொழில் மேன்மை அடைய வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடைய லக்னத்தை பொறுத்து எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும் எந்த தானத்தை செய்ய வேண்டும் என்றும் தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் பதினோராம் இடம்தான் தொழிற் ஸ்தானத்திற்குரிய இடமாக கருதப்படுகிறது. அதாவது லாப ஸ்தானமாக திகழ்கிறது. மேலும் அந்த பதினோராம் இடம்தான் ஆசைகளை நிறைவேற்றுவதற்குரிய இடமாகவும் இருக்கிறது. அதனால் ஒருவருடைய லக்னத்திலிருந்து 11-ம் இடத்தை ஆக்டிவேட் செய்வதன் மூலம் அவர்களுடைய தொழில் மேன்மை அடையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேஷ லக்னத்திற்கு 11-ஆம் இடமாக கும்பம் விளங்குகிறது. அதனால் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் எல்லை தெய்வங்களை வழிபட வேண்டும். மேலும் எள்ளை தானமாக சனிக்கிழமை தோறும் வழங்க வேண்டும்.

ரிஷப லக்னத்திற்கு 11-ஆம் இடமாக மீனம் விளங்குகிறது. அதனால் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் சித்தர்கள் வழிபாடை மேற்கொள்ள வேண்டும். மேலும் கொண்டக்கடலையை வியாழக்கிழமை தோறும் தானமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

மிதுன லக்னத்திற்கு 11ஆம் இடமாக மேஷமவிளங்குகிறது. அதனால் மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் துவரம் பருப்பை செவ்வாய்க்கிழமை தோறும் தானமாக வழங்க வேண்டும். மேலும் முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

கடக லக்னத்திற்கு 11-ஆம் இடமாக ரிஷபம் விளங்குகிறது. அதனால் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளை மொச்சை தானமாக வழங்க வேண்டும். அதோடு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.

- Advertisement -

சிம்ம லக்னத்திற்கு 11-ஆம் இடமாக மிதுனம் விளங்குகிறது. அதனால் அவர்கள் பச்சைப் பயிரை புதன்கிழமை தோறும் தானமாக வழங்க வேண்டும். அதோடு பெருமாளை வழிபட வேண்டும்.

கன்னி லக்னத்திற்கு 11-ஆம் இடமாக கடகம் விளங்குகிறது. அரிசி, நெல் போன்றவற்றை தானமாக வழங்குவதோடு அம்மனை வழிபட வேண்டும்.

துலாம் லக்னத்திற்கு 11-ஆம் இடமாக சிம்மம் விளங்குகிறது. கோதுமை மற்றும் கோதுமை உணவுகளை தானமாக வழங்கி சிவ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

விருச்சிக லக்னத்திற்கு 11-ஆம் இடமாக கன்னி விளங்குகிறது. இவர்களும் பச்சைப்பயிரை தானமாக வழங்கி மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும்.

தனுசு லக்னத்திற்கு 11ஆம் இடமாக துலாம் விளங்குகிறது. வெள்ளை மொச்சை தானமாக வழங்கி பெருமாளை வழிபட வேண்டும்.

மகர லக்கினத்திற்கு 11-ஆம் இடமாக விருச்சகம் விளங்குகிறது. உக்கிரமான பெண் தெய்வங்களை வழிபட்டு துவரம் பருப்பை தானமாக வழங்க வேண்டும்.

கும்ப லக்னத்திற்கு பதினோராம் இடமாக தனுசு விளங்குகிறது. கொண்டை கடலையை தானமாக வழங்கி தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

மீன லக்னத்திற்கு 11-ஆம் இடமாக மகரம் விளங்குகிறது. எல்லை தெய்வங்களை வழிபட்டு சனிக்கிழமை தோறும் எள் தானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சனிப்பெயர்ச்சியால் சிக்க கூடிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்

இந்த எளிமையான வழிபாடு மற்றும் தானத்தை நம்மால் இயன்ற அளவு எந்த அளவுக்கு செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய தொழிலில் நல்ல லாபம் ஏற்படும்.

- Advertisement -