உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வமும், வெற்றியும் அழியாமல் நிலைத்து நிற்க, வழிபடவேண்டிய தெய்வமும், சொல்ல வேண்டிய மந்திரமும்.

muruganl

தனக்கான செல்வத்தையும் வெற்றியையும் ஒருவர் தேடிக் கொண்டால் மட்டும் போதாது. அதை தக்க வைத்துக் கொள்ளவும் தெரிய வேண்டும். அழியா புகழும் செல்வமும் தான் ஒருவருக்கு மேலும் மேலும் முன்னேற்றத்தை கொடுக்கமுடியும். நம்முடைய வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்கு, வெற்றியை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதற்கும், தோல்வியில் மன உறுதியை கொடுப்பதற்கும், விடாமுயற்சியோடு வெற்றி காண்பதற்கும், ஆன்மீக ரீதியாக எந்த இறைவனை வழிபடலாம், எந்த மந்திரத்தை சொல்லி வழிபடலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குன்று கிடக்கும் இடத்தில் எல்லாம் குமரன் குடி கொண்டு இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில் எல்லாம் குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட முருகன் வழிபாட்டை எவர் ஒருவர் தொடர்ந்து செய்து வருகின்றாரோ, அவருக்கு புகழ்ச்சியும், செல்வமும் வளர்ச்சியும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு தான் இருக்கும்.

முடிந்தவரை வாரம் ஒருமுறையாவது முருகன் கோவிலுக்கு சென்று, முருகப்பெருமானை தரிசனம் செய்யும் வழிபாட்டு முறையை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வரவேண்டும். உங்களுடைய வீட்டின் அருகில் குன்றின் மேல் இருக்கும் முருகன் இருந்தால், அந்த முருகப் பெருமானை மாதத்தில் ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

murugan

முருகருக்கு அபிஷேகத்திற்காக தேன் அல்லது விபூதி அல்லது உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களையும் வாங்கி கொடுப்பது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். நம்முடைய வீட்டில் தினம் தோறும் முருகப் பெருமானை நினைத்து எப்படி வழிபாடு செய்வது? முருகப்பெருமானுக்கு விருப்பமான முல்லை அல்லது அரளிப் பூவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

காலையில் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து, ஒவ்வொரு பூக்களை எடுத்து அர்ச்சனை செய்யவேண்டும். அர்ச்சனை செய்யும் போது பின்வரும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது செல்வத்தையும், முன்னேற்றத்தையும் நமக்கு வாரி வழங்குவதோடு மட்டுமல்லாமல் நம்மிடமே செல்வத்தை நிலைத்து நிற்கச் செய்யும், என்பதில் சந்தேகமே கிடையாது.

murugan

ஓம் ஐம் சம் சரவணபவாய நமஹ!

ஒருவரி மந்திரம்தான் இது. இதை உச்சரிப்பதில் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. இந்த மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம்.  நீங்கள் வேலைக்காக நேர்காணலுக்கு சென்றாலும், அல்லது சுப காரியத்திற்கு சென்றாலும், அல்லது குறிப்பிட்ட முக்கியமான வேலைகள் உங்களது பக்கம் கையொப்பம் ஆக வேண்டும் என்றாலும், கோர்ட் கேஸ் எந்த பிரச்சனை உங்கள் பக்கம் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஞாயமான கோரிக்கைகள் வெற்றியடைய வெளியே செல்லும் போது, அந்த இடத்திற்குச் சென்ற பின்பும் கூட, நீங்க இந்த மந்திரத்தை உங்களது மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால், உங்களுக்கு அந்த காரியம் நிச்சயம் வெற்றிதான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
செய்யும் எந்த தொழிலும் அமோகமாக வளர பெருமாள் உண்டியலை இப்படி செய்து வாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.