தொழிலில் லாபமே வரவில்லையா? 11 வாரம் தொடர்ந்து இதை செய்தால் போதும் நஷ்டத்தில் இருக்கும் தொழில் கூட லாபத்தை குவிக்கும்.

thozhilil labam pera
- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் செய்யும் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதே சமயம் அந்த தொழில் சிறந்து விளங்க கடுமையாக உழைக்கவும் செய்வார்கள் ஆனாலும் சில நேரங்களில் தொழிலில் நஷ்டங்களையும் இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. அவ்வாறு தொழில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கான பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய முயற்சியோடு, தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக நாம் செய்யும் தொழிலில் வெற்றியை பெறலாம். தொழில்கள் சிறப்பாகவும், லாபகரமாகவும் நடைபெறுவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் இன்று பார்க்கப் போகும் பரிகாரமானது உணவகம் நடத்துவது, மளிகை கடை, காய்கறி கடை, தின்பண்டங்கள் விற்கும் கடை இப்படி உணவு சம்பந்தப்பட்ட தொழிலை மேற்கொள்பவர்களுக்கு உரிய பரிகாரம்.

- Advertisement -

உணவு என்றதும் நம் அனைவரின் நினைவுக்கு வருபவள் நம்முடைய தாய். எங்கு சென்று என்ன சாப்பிட்டாலும் நம்முடைய அம்மா சமைத்ததற்கு ஈடாகாது. அதேபோல் தான் இந்த உலகத்திற்கு தாயாக கருதப்படுபவள் அம்பாள். இந்த அம்மனை வணங்குவதால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. தொழிலில் சிறந்து விளங்க எப்படி அம்மனை வணங்க வேண்டும் என்று பாப்போம்.

தொழில் நன்றாக நடக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த பரிகாரத்தை நாம் தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் தான் செய்ய வேண்டும். அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் இதை செய்ய வேண்டும். காலை வேளையில் செய்வது சாலச் சிறந்தது. என்ன செய்ய வேண்டும்? மிகவும் எளிமையான பரிகாரம்தான். மாவிளக்கு போட வேண்டும். பச்சரிசியை மாவாக இடித்து அதில் வெல்லத்தை சேர்த்து ஏலக்காய் தூளையும் சேர்த்து உருண்டையாக பிடித்து, பிறகு அதில் நெய் ஊற்றுவதற்கேற்றமாறு நடுவில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி அதில் நெய்யை ஊற்றி பிறகு பஞ்சு திரியை போட்டு மாவிளக்கை தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மாவிளக்கில் ஐந்து திரிகளை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது. காலையில் தொழில் நடக்கும் ஸ்தாபனத்தை சுத்தம் செய்த பிறகு, அம்மனின் புகைப்படத்திற்கு கீழே அதாவது அம்மனின் பாதத்திற்கு கீழே அது புகைப்படமாக இருந்தாலும் சரி, விக்ரஹமாக இருந்தாலும் சரி ஒரு வாழை இலையை போட்டு அதில் இரண்டு மாவிளக்கு வைத்து அதோடு வெற்றிலை பாக்கையும் வைக்க வேண்டும்.

இந்த இரண்டு மாவிளக்கையும் ஏற்றிய பிறகு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு திரி முழுவதும் எறிவதற்கு முன்பாக அந்த திரிகளை எடுத்து வேறு ஒரு தட்டிலோ அல்லது இலையிலோ வைத்துவிட்டு, இந்த மாவிளக்கை எடுத்து கடையில் வேலை செய்பவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம் அல்லது அங்கு சுற்றி இருக்கும் குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து 11 வாரங்கள் நாம் செய்து வந்தால், நம்முடைய தொழில் சிறப்பாக, லாபகரமாக நடைபெறும். எந்த தடைகள் இருந்தாலும் விலகிவிடும். ஒரு கடைக்கு இரண்டாக தொழில் வளர்ச்சி பெறும்.

- Advertisement -