திடீரென சரிந்த தொழிலை சரி செய்ய வெண்கடுகை ஞாயிற்று கிழமையில் இந்த பொருளுடன் சேர்த்து வைத்தால் போதும். நஷ்டத்தையே பார்த்துக் கொண்டிருந்த உங்க தொழிலில் இனி லாபத்தை மட்டும் தான் பார்ப்பீங்க.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு கஷ்ட காலம் வந்து விட்டால் அது என்னவெல்லாம் செய்யும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இது மாதிரியான நேரத்தில் முதலில் நமக்கு வருமானத்தை தான் தடை செய்யும். அதிலும் இந்த வியாபாரம், தொழில் செய்பவர்களை அடியோடு நஷ்டப்படுத்தி விடும். இது போன்ற காரணங்களால் உங்கள் தொழில் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்யலாம் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தொழிலில் நஷ்டம் ஏற்படுவது பெரும்பாலும் நம்முடைய போராத காலம்,கண் திருஷ்டி போன்றவைகளாக இருக்கக் கூடும். சில நேரம் நம்முடைய கிரகங்களின் மாற்றங்களாலும் கூட நம்முடைய தொழிற் ஸ்தானங்கள் அடிப்பட வாய்ப்பு அதிகம். அதுக்கு இந்த எலுமிச்சை பரிகாரம் செய்யும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் எல்லாம் நீங்கி தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறலாம். இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தொழிலில் முன்னேற்றம் அடைய எலுமிச்சை பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் ஞாயிற்றுக்கிழமையில் தான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அனைத்து வேலைகளும் முடித்த பிறகு இரவு கடை அல்லது அலுவலகம் மூடும் நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரம் செய்ய ஐந்து எலுமிச்சை பழம், வெண்கடுகு, மிளகு தூள் இவை மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழங்களை இரண்டு சரிபாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து ஒரு பாதியில் வெண்கடுகை தூவி அதன் மேல் மிளகுத் தூளையும் தூவி அதை அப்படியே இன்னொரு பாதி எலுமிச்சை பழத்தை வைத்து மூடி வைத்து விடுங்கள். இதே போல் ஐந்து எலுமிச்சை பழத்தையும் தயார் செய்து வியாபார ஸ்தலத்தில் நான்கு மூலையிலும் வைத்து விட்டு, மீதம் இருக்கும் ஒரு எலுமிச்சை பழத்தை கடை அல்லது அலுவலகத்தின் நடுப்பகுதியில் வைத்து விட்டு கடையை சாற்றி விட்டு சென்று விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் திங்கட்கிழமை காலையில் நீங்கள் கடை அல்லது அலுவலகத்தை திறக்கும் போது இந்த எலுமிச்சை பழங்கள் வெண்கடுகு அனைத்தையும் கொஞ்சம் கூட தரையில் இல்லாமல் சுத்தம் செய்த பிறகு நீங்கள் வியாபாரம் நடத்தும் இடத்தை விட்டு சற்று தொலைவில் இவற்றையெல்லாம் போட்டு கொளுத்தி விடுங்கள்.

இந்த பரிகாரத்தை வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து செய்து வாருங்கள். எந்த சூழ்நிலையால் உங்கள் வியாபாரம் தடைபட்டிருந்தாலும் அது தடையில்லாமல் செழித்து நடக்க இது உதவி புரியும். இதை இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும் என்று தனக்கு கிடையாது. தொழில் வியாபாரம் எதுவாயினும் எப்போதும் நன்றாக நடந்தால் தானே நல்லது என்று இதை தொடர்ச்சியாக கடைப்பிடித்தாத வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தெரியாமல் கூட இந்த சில பொருட்களை எவருக்கும் பரிசளிக்காதீர்கள் உறவு முறியும் தெரியுமா?

இந்த ஒரு எளிய பரிகாரத்துடன் கடினமான உழைப்பு தன்னம்பிக்கையுடன் உங்களுடைய வியாபாரத்தை பல மடங்கு பெருக்கி வாழ்க்கையில் எல்லாவித செல்வங்களையும் பெற்று நல்ல முறையில் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்ளலாம்.

- Advertisement -