பெருமாளை வீட்டில் இந்த இடத்தில் வைத்து தினந்தோறும், இப்படி வழிபாடு செய்தால், செய்யும் தொழிலில் கொடிகட்டிப்பறந்து, கோடி லாபத்தை பெறலாம்.

perumal

நிறைய பேருக்கு சொந்த தொழில் செய்து அதிகப்படியான லாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சில பேரால் அந்த சொந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்ல முடியாது. தடுமாற்றம் இருக்கும். தொழிலில் போட்ட முதலீட்டில் இருந்து சரியான லாபத்தை எடுக்க மாட்டார்கள். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். வேலை செய்து மாத சம்பளத்தை பெற்று முன்னேறுவதை காட்டிலும், சொந்த தொழிலில் முதலீடு செய்து அதிகப்படியான லாபத்தை பெற்று, அதி விரைவாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, சொந்தத் தொழிலில் வெற்றி பெற ஆன்மீக ரீதியான ஒரு வழிபாட்டு முறையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

perumal

தொழிலில் தடை நீங்க, வருமானம் அதிகரிக்க, வீட்டில் இருக்கும் உங்களது பிள்ளைகள் புத்தி கூர்மை யோடு செயல்பட உங்களுடைய வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க, உங்களுடைய வீட்டில் இந்த முறையை பின்பற்றலாம். தொழில் செய்யும் இடத்திலும், இந்த பரிகார முறையை பின்பற்றலாம். உங்கள் கைக்கு வரக்கூடிய பணம் தங்குதடையில்லாமல் வரும்.

பொதுவாகவே பல கோடிகளுக்கும் பிரம்மாண்டத்திற்கும் சொந்தமானவர் தான் அந்த பெருமாள். தினம்தோறும் ஆடை ஆபரண இரத்தின கல்லோடு ஜொலிக்கும் பெருமாள் முகத்தில் தரிசனம் செய்தாலே போதும். நிச்சயம் பண கஷ்டம் தீரும். இப்படியாக ஆடை அலங்காரத்துடன் இருக்கும் பெருமாளை உங்களுடைய வீட்டில், நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வடக்கு திசையில் வைக்க வேண்டும். வடக்கு திசையில் உள்ள சுவரில் பெருமாளை மாட்டி வைத்தால், பெருமாள் தெற்கு பார்த்தவாறு இருப்பார்.

perumal

இப்படியாக வடக்கு திசையில் இருக்கும் பெருமாளின் பாதங்களை தினம்தோறும் காலையில் தொட்டு வணங்கிவிட்டு, அதன்பின்பு வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள். தொழில் செய்யும் இடத்திலும் பெருமாலை இப்படியாக வடக்கு திசையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். தினமும் உங்களுடைய தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாக பெருமலை பார்த்து, பெருமாளின் பாதங்களை தொட்டு உங்களது கண்களில் ஒற்றிக்கொண்டு அதன் பின்பு உங்களது தொழிலை தொடங்க ஆரம்பிக்கலாம்.

- Advertisement -

முடிந்தால் உங்களுடைய வீட்டில் வடக்குப் பக்கம் இருக்கும் சுவற்றில் பச்சை நிற வர்ணத்தை தீட்டி வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் வடக்குப்பக்கம் முடிந்த வரை பச்சை நிற செடி கொடிகளை செழிப்பாக வளர்த்து வாருங்கள். வீட்டின் வடக்குப் பக்கத்தில் தாராளமாக இடம் இருக்கும்பட்சத்தில், அந்த இடத்தில் மாதுளை செடி, நெல்லி செடி, மருதாணி செடி, இப்படிப்பட்ட செடிகளை வளர்த்து வந்தாலும் அது  அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

perumal

உங்களுடைய வீடு, தொழில் செய்யும் இடம், உங்களது கடை, எதுவாக இருந்தாலும் சரி அந்த இடத்தில் வடக்கு திசை எவ்வளவு பசுமையாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு உங்களது வாழ்க்கையும் பசுமையாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Elakkai

வடக்குப் பக்கம் இருக்கும் பெருமாளுக்கு தினமும் இரண்டு ஏலக்காய்களை நிவேதனமாக வைத்து, அந்த ஏலக்காய்களை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், நிச்சயமாக இந்த ஆன்மீக வழிபாட்டுடன் சேரும் கடின உழைப்பு, உங்களை என்றாவது ஒருநாள் கோடீஸ்வரராக்கியே தீரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.