வியாபாரம் பன்மடங்கு பெருகி, லாபம் அதிகரித்து வியாபாரத்தில் நீங்களும் ஒரு பெரும் புள்ளியாக மாற வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த தீபத்தை ஏற்றி வாருங்கள்.

business dheepam
- Advertisement -

போட்டி நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் ஒரு தொழிலை தொடங்கி அதில் லாபத்தை பார்ப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமே கிடையாது. அதற்காக பெரும் பாடுபட வேண்டும். அது எந்த மாதிரியான ஒரு தொழிலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய பெட்டி கடையிலிருந்து பெரிய அளவில் நடத்தும் தொழில் வரை எல்லாவற்றிலும் இன்று போட்டிகள் ஏராளம். இப்படியான இந்த காலக்கட்டத்தில் ஒரு தொழிலை தொடங்கி அது முன்னேற்ற பாதையில் செல்லவும், வாடிக்கையாளர்கள் தேடி வரவும், வருமானம் அதிகரிக்கவும் வாரம் தோறும் இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன விளக்கு எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அந்தத் தொழிலை குறித்து உங்களுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் தொழிலை நீங்களே முன் நின்று கவனிக்கும் படியாக இருக்க வேண்டும். பிறரையை முழுவதுமாக நம்பி வியாபாரத்தை விடுவது நிச்சயம் நமக்கு ஒரு நாள் பாதிப்பை ஏற்படுத்தும். எந்த ஒரு தொழிலிலும் அயராது உழைத்தால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும். இவையெல்லாம் செய்தும் சில நேரங்களில் வேறு சில தீய செயல்களாலோ அல்லது கெட்ட சக்திகளாலோ, கண் திருஷ்டிகளாலோ, பிறர் செய்யும் சூழ்ச்சியால் தொழில் முடக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதை சரி செய்ய இந்த ஒரு விளக்கை தொடர்ந்து ஏற்றி வாருங்கள். அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வியாபார சிறக்க ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை சனிக் கிழமைகளில் தான் ஏற்ற வேண்டும். இதை நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் ஏற்றினால் மிகவும் நல்லது. அப்படி உங்களுக்கு அங்கு ஏற்ற வசதி இல்லாத பட்சத்தில் வீட்டிலும் ஏற்றலாம். ஆனால் இதை பூஜை அறையில் ஏற்றக் கூடாது. வீட்டில் ஏற்றுவதாக இருந்தால் வரவேற்பு அறையில் ஏற்றுங்கள்.

சனிக்கிழமை காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். இதற்கு ஒரு புதிய அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்த பிறகு அதில் வேப்பெண்ணையை ஊற்றி வெள்ளை, சிகப்பு இரண்டு திரிகளையும் ஒன்றாக சேர்த்து ஒரே திரியாக போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் தெற்கு நோக்கி எரிய வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் அதிக நேரம் எரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை சிறிது நேரம் எரிந்தாலே போதும். இதை மற்ற நாட்களில் ஏற்றக் கூடாது சனிக்கிழமை மட்டும் ஏற்றினால் போதும். ஒரு முறை ஏற்றிய விளக்கு திரி அனைத்தையும் அப்படியே வைத்து அடுத்த சனிக்கிழமையும் ஏற்றலாம். புதிதாக மாற்றி ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதையும் படிக்கலாமே: உங்கள் வாழ்க்கையில் பாதி துன்பம் காணாமல் கரைய சனிக்கிழமைகளில் இதை மட்டும் செய்ய மறக்கவே மறக்காதீங்க!

வியாபாரத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நல்ல முறையில் பலன் அளிக்க உங்களுடைய அயராது உழைப்புடன் சேர்த்து இந்த ஒரு சிறிய பரிகாரத்தையும் செய்து பாருங்கள். மந்தபட்டுப் போன உங்கள் தொழில் கூட சரியாகி அதிக லாபத்தை பெறலாம். நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரம் செய்து வியாபாரத்தில் வெற்றி காணுங்கள்.

- Advertisement -