மூன்று மடங்கு முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரு மூலிகை ஹேர் பேக் போதும். இளநரையை வராமல் தடுக்கவும், நரை முடியை கருப்பாக மாற்றக்கூடிய சக்தியும் இதற்கு உண்டு.

hair15
- Advertisement -

ஆயுர்வேத பொருட்களை வைத்து எந்த ஒரு கெமிக்கலும் கலக்காத சூப்பரான மூலிகை பொருட்கள் நிறைந்த ஒரு ஹேர் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய தலை முடி வளராமல் மெல்லிசாக இருந்தால், அதை அடர்த்தியாக வளரச் செய்யவும், இளநரை வராமல் தடுக்கவும், பேன் பொடுகு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், புதிய முடி வளர்ச்சியை தூண்டவும் இந்த ஹேர் பேக் நமக்கு உபயோகமானதாக இருக்கும்.

இந்த பதிவில் இரண்டு வகையான ஹேர் பேக்கை பார்க்க போகின்றோம். இரண்டு வகையான ஹேர்பேக்கும் பொதுவாக இருக்கக்கூடிய பொருள் திரிபலா பொடி. பொதுவாக திரிபலா பொடி என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், இந்த மூன்று பொருட்களின் கலவைதான் திரிபலா பொடி என்று சொல்லுவார்கள். ஆயுர்வேதத்தில் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் இந்த திரிபலா பொடி நம்முடைய முடி பிரச்சனைக்கும் நல்லதொரு தீர்வை கொடுக்கும்.

- Advertisement -

குறிப்பு 1:
முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் திரிபலா பொடி – 1 ஸ்பூன், அலோவேரா ஜெல் – 2 ஸ்பூன், கெட்டித் தயிர் – 4 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக அடித்து கலக்க வேண்டும். உங்களால் கையால் இதை கலக்க முடியவில்லை என்றால் இந்த நான்கு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அடித்து கட்டிகள் இல்லாமல் பேக்காக தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேக் பார்ப்பதற்கு அப்படியே கிரீமியாக இருக்க வேண்டும்.

இந்த பேக்கை உங்களுடைய தலை முடியில் வேர்க்கால்களில் படும்படி பேக் போட்டு விட்டு விடுங்கள். 15 லிருந்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி கொள்ளலாம்.

- Advertisement -

பொதுவாக திரிபலா பொடியை அப்படியே நேராக தலையில் போடக்கூடாது. முடியை ட்ரை ஆக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. திரிபலா பொடியை பயன்படுத்தும்போது எண்ணெய் சத்து உள்ள பொருட்களோடு சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு 2:
முதலில் 1/2 மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். திக்கான தேங்காய் பாலாக இருக்கட்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் திரிபலா பொடி 1 ஸ்பூன், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பால் தேவையான அளவு ஊற்றி இந்த பொடியை கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். இதோடு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து இதை ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளலாம். இந்த பேக் கொஞ்சம் தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை அப்படியே தலையில் அப்ளை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

எப்பவும் போல ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பு தலையில் நன்றாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிட்டு அதன் பின்பு ஹேர் பேக்கை அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசி விடுங்கள். அவ்வளவு தான். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வர தலைமுடியில் இருக்கும் பிரச்சனை படிப்படியாக குறையத் தொடங்கும். புதிய முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு இந்த ஹேர் பேக் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு குறிப்பில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றி கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள் 3 மாதத்தில் தலை முடி வளர்ச்சியில் நல்ல வித்தியோசத்தை பார்க்கலாம்.

- Advertisement -