குளங்களில் காசு போட்டால் இதெல்லாம் நடக்குமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

coins-in-water
- Advertisement -

கோவில் குளங்களில் பண்டைய காலங்களில் காசு போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதன் உண்மை அறிவியல் காரணம் தெரியுமா? குளத்தில் காசு போட்டால் அதிர்ஷ்டம் வருமா? பழங்காலத்தில் மட்டும் இல்லங்க! இந்த நவீன யுகத்திலும் பல கோவில்களில் தண்ணீரில் காசு போடுவதை இன்றும் நாம் பார்க்க முடிகிறது. காசு போட்டால் அதிர்ஷ்டம் வரும் என்று பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. எதற்காக குளத்தில் காசு போடப்படுகிறது? அதன் உண்மைப் பின்னணி என்ன? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்!

pond kulam

அந்த காலத்தில் பண்டமாற்று முறைக்கு பின்னர் வந்த நாணயங்கள் செம்பினால் ஆனவை. மனித உடலுக்கு செம்பு மிகவும் முக்கியமான சத்தாக இருக்கிறது. தினமும் குறிப்பிட்ட அளவு செம்பு சத்து நம் உடலுக்கு கொடுப்பதால் இன்று உலகில் பலரும் அவதிப்பட்டு வரும் மூட்டு வலி, மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் மிகவும் அறிவாற்றல் நிறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். செம்பு நாணயங்களை குளத்தில் போட்டு வைப்பதால் அந்த குளத்து நீரில் அந்த சத்துக்கள் ஊறிப் போய் நிரம்பியிருக்கும். இப்போது நாம் உபயோகிக்கும் கேன் தண்ணீர் எந்த அளவிற்கு நமக்கு சுகாதாரமானது என்பது தெரிய வாய்ப்பில்லை. அந்த காலத்திலெல்லாம் குளத்திலிருந்து தான் குடிக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு போவார்கள். செம்பு காசுகள் நிறைந்த அந்த தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு நிறைய நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றன. இப்போது செம்பு நாணயங்கள் இல்லாவிட்டாலும், துருப்பிடிக்காத எக்கு நாணயங்கள் இது போல் கோயில்களில் சில இடங்களில் போடப்பட்டு வருகின்றன.

copper coins

இவ்வாறு கோவில் குளங்களில் போடப்படும் நாணயங்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. கோவில் குளத்தில் போடப்படும் நாணயங்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்பது எதனால் கூறப்பட்டது தெரியுமா? செம்பு என்ற உலோகம் ஆன்மீக ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால் தான் இன்றைய காலத்தில் செம்பு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

- Advertisement -

செம்பில் குடிக்கப்படும் தண்ணீர் அவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போது இதனுடைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. எல்லோரும் செம்பு குடங்கள், செம்பு வாட்டர் பாட்டில்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இதற்குக் காரணம் அதன் மகத்துவத்தை நாம் இப்போது உணர ஆரம்பித்து இருக்கிறோம் என்பது தான் உண்மை.

copper-vessel

தமிழன் பண்டைய காலத்தை நோக்கி பின்நோக்கி போய்க் கொண்டிருக்கிறான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதில் ஒரு விஷயம் தான் இந்த செம்பு பழக்கம். செம்பில் இருக்கும் சில மூலப்பொருள் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடியது. இதனால் தண்ணீர் எத்தனை நாட்கள் ஆனாலும் சுத்தமான தண்ணீராகவே இருக்கும். செம்பு தைராய்டுக்கு எதிராக செயல்படக் கூடியது.

- Advertisement -

copper-water

இது போன்ற காரணங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும் நிறைய சக்தி கொண்டுள்ளதால் கோவில் குளத்தில் முங்கி எழுவதால் நிறைய பிரச்சனைகள் தீர்ந்து வந்தது. அந்தக் காரணத்தினால் தான் கோவில் குளத்தில் நாணயங்களை போட்டால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறப்பட்டது.

இதையும் படிக்கலாமே
விளக்கு வைத்த பின்னர் அவசர தேவைக்கு கூட இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -