எதையெல்லாம் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்தால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் தெரியுமா?

peace

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தேவை நிம்மதி தான். சில சமயங்களில் பணம் கூட வேண்டாம். என்னை விட்டு விடுங்கள். நிம்மதியாக இருந்து விட்டு போய் விடுகிறேன் என்று கூற நேரிடும். அப்படி என்றால் செல்வத்தை விட மேலானது நிம்மதி. பணம் பணம் என்று அதன் பின்னால் ஓடுவதை நிறுத்தி விட்டு நிம்மதியை உருவாக்கி கொள்ளுங்கள். நிம்மதி இல்லை என்றால் செல்வம் இருந்து என்ன பயன்? ஒரு புறம் பக்தி பெருகினாலும் மறுபுறம் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு முக்கிய காரணம் அவரவர் மனதை கட்டுபடுத்த தெரியாமல் இருக்கின்றோம். இறையருள் சூழ வேண்டுமென்றால் மனதை அடக்கி ஒழுக்க நெறியில் நம்மை நாம் முதலில் சரி செய்து கொள்ள வேண்டும். எவற்றையெல்லாம் உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்தால் நிம்மதி கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

scolding-each-other

முதலாவதாக பிறரிடம் பிழை காணுதல். பெரும்பாலானோர் தன்னுடைய குறையை எண்ணி பார்ப்பதில்லை. எப்போதும், எதிலும் குறை கண்டு கொண்டே இருப்பார்கள். தவறு செய்வது மனித இயல்பு தானே? குறை சொல்லி கொண்டே இருந்தால் சரி ஆகி விடுமா? குறை கூறுவது எளிது. நடைமுறையில் குறை கூறுவோர் தான் உண்மையில் குற்றவாளியாக இருப்பார்கள். சதா குறை கூறினால் உங்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பு தான் வருமே ஒழிய நல்லெண்ணம் வராது. குறை கூறுவதை விடுத்து நீங்கள் சரியாக இருந்துவிட்டு போங்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் என்ன குறை இருக்கிறது என்று சுய கேள்வி கேட்டு கொள்வது தான் நல்லது. பிறரிடம் உள்ள குறையை நோக்கினால் நிம்மதி தான் போகும்.

அடுத்து பழி போடுதல். எந்த தவறும் செய்யாத ஒருவரை பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர் போல் தன்னை தானே எண்ணிக்கொண்டு மற்றவர்களின் மேல் சுலபமாக பழி கூறி விடுவார்கள். நமக்கு முழுமையாக எதுவும் தெரியாத பட்சத்தில் யாரை பற்றியும் யாரிடமும் தவறாக பேசக் கூடாது. நல்லது செய்ய நினைப்பவர்களையே விமர்சிக்கும் காலம் இது. விமர்சனம் பார்த்தால் நல்லது செய்யவும் முடியாது. வாய் இருந்தால் பேசத்தான் செய்வார்கள். இறைவன் இருக்கிறார். அவர் உங்களின் பாவங்களின் கணக்கு வைத்திருப்பார். அடுத்தவர் மேல் பழி போடுதல் மகா பாவம் ஆகும். நீங்கள் தெரியாமல் கூறி இருந்தாலும் அது உங்களின் பாவ கணக்கில் சேர்ந்து விடும்.

enemy

எதிரிகளை வளர்த்தல். யாரிடமும் உங்களுக்கு பகை உணர்வு இருக்கவே கூடாது. எல்லாரும் மனிதர்கள் தான். துஷ்டனை கண்டால் தூர விலகுவது தான் நல்லது. அதை விடுத்து அவர் மேல் பகை கொண்டு பழி உணர்ச்சியில் இருப்போமேயானால் அதன் தாக்கம் உங்களையும் தான் அழிக்கும். நட்பு பாராட்டுவது தான் நிம்மதியான வாழ்க்கைக்கு நல்லது. பகைமை பாராட்டுவது அந்த நிம்மதியை கெடுத்து விடும். உங்களின் அன்பு புரியவில்லையா விட்டு விடுங்கள். விலகி நில்லுங்கள். அவர்களே உணர்ந்து திருந்தி வருவார்கள். பகை கொண்டால் மனம் அமைதியாக இருக்காது. பின்னர் எப்படி நிம்மதி வரும்?

- Advertisement -

இவர் சொல்வதை அவரிடம் சொல்வது அவர் சொல்வதை இவரிடம் சொல்வது என்று கோல் மூட்டும் பழக்கம் மோசமான ஒன்று. நன்றாக இருக்கும் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு செல்வது. மனித வர்கத்தில் மிகவும் கேவலமான பழக்கமாக பார்க்கப்படுவது கோல் மூட்டுதல் தான். ஒரு உறவை வலுவாக்கத்தான் பார்க்க வேண்டும். அதை விடுத்து கோல் மூட்டி பிரிப்பது தவறான செயலாகும். நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்டது நினைக்காமல் இருந்தாலே போதும் மோட்சம் பெறலாம்.

enemy1

இதே போல் காழ்ப்புணர்ச்சி கொள்ளல். உங்களுக்கு பிடிக்காத சிலரின் மேல் கடும் வெறுப்பு இருக்கும். ஆனால் அவர்களை உங்களால் ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் இருப்பீர்கள். அந்த கோபம் காலபோக்கில் நஞ்சாக மாறி விடும். அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி ஆட்கொண்டு விடும். இதனால் உங்கள் மனதில் நிம்மதி இருக்காது. எதிரிகளை ஒழிப்பதாக எண்ணிக் கொண்டு உங்களை நீங்களே இழந்து கொண்டிருப்பீர்கள். அவர்கள் செய்த பாவத்திற்குரிய பலனை இறைவன் கொடுப்பார். பிறரின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டு உங்கள் நிம்மதியை இழக்காதீர்கள்.

இதையெல்லாம் விடுத்து உள்ளத்தை சுத்தமாக வைத்திருந்தால் நிம்மதி தானாகவே வந்து விடும். நம்மை பற்றிய ஆய்வு தான் நமக்கு தேவை. அடுத்தவரை பற்றிய ஆய்வு அனாவசியமான ஒன்று அல்லவா? இதையெல்லாம் மனதிலிருந்து நீக்கினால் நம்மிடம் பரிபூரண பக்தி உண்டாகும். மன தூய்மையுடன், முழு பக்தியுடன் இறைவனிடம் கேட்கப்படும் எல்லாமே பூர்த்தியாகிவிடும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் இல்லத்தில் பறவைகள் கூடு கட்டியிருந்தால் என்ன பலன் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mana nimmathi in Tamil. Mana nimmathi vendum in Tamil. Mana nimmathi pera in Tamil. Mana nimmathi tips Tamil.