முன்னோர்களின் ஆசி இல்லாததால் கஷ்டத்தில் உள்ளீர்களா? இந்த நாளில் வீட்டில் தூபம் போட்டால் போதும் முன்னோர்களின் ஆசியோடு சித்தர்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

agathiyar-sambrani
- Advertisement -

இறைவழிபாடு என்பது இந்திய பண்பாட்டில் மறுக்க முடியாத ஒரு அங்கமாக திகழ்கிறது. எந்த இறை வழிபாட்டு முறைகளிலும், அதற்கே உரிய சில விதிமுறைகளும், செய்முறைகளும் உள்ளன. பொதுவாக எந்த ஒரு வகை வழிபாட்டு முறை என்றாலும் அதில், தெய்வங்களுக்கு வாசனை மிகுந்த சாம்பிராணி தூபம் போடுவது என்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக நம் இல்லங்களில் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் இன்ன பிற விசேஷ தினங்களிலும் தூபம் போடும் பழக்கத்தை மேற்கொள்கிறோம். அந்த வகையில் எந்தெந்த கிழமைகளில் தூபம் போடுவதால், நமக்கு ஆன்மீக ரீதியாக என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் தூபம் போடுவதால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆத்மா பலம் கூடும். சிவபெருமானின் பூரணமான அருள் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு பெருகும். செல்வம் மற்றும் புகழ் சேரும்.

- Advertisement -

ஒவ்வொரு வாரமும் வருகின்ற திங்கட்கிழமைகளில் வீட்டில் தூபம் போடுவதால், அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். மனோதிடம் பெருகும். சிறந்த எண்ணங்களும், சிந்தனைகளும் மனதில் ஏற்படும். அம்பாள் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமையில் வீட்டில் தூபம் போடுவதால் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் தீரும். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டிகள் நீங்கும். முருகப்பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

வாரா வாரம் வருகின்ற புதன்கிழமைகளில் வீட்டில் தூபம் போடுவதால் எண்ணமும், செயலும் சிறக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகளின் மூலம் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும். பிறரிடம் ஏமாறுதல் எதிரிகளின் சூழ்ச்சியில் விழுதல் போன்ற நிலை ஏற்படாமல் காக்கும். “சுதர்சனர்” எனப்படும் திருமாலின் முழுமையான அருள் கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் வீட்டில் தூபம் போடுதல் மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்க வல்லது. பொதுவாக வியாழக்கிழமை என்பது நவகிரகங்களில் குரு பகவானுக்குரியதாகவும், சித்தர்கள் வழிபாட்டிற்குரிய கிழமையாகவும் இருப்பதால் இந்த தினத்தில் வீட்டில் தூபம் போடுவதால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். மகான்கள், சித்தர்களின் அருள் கிடைக்கும். வாழ்வில் மிக சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பது செல்வ மகளான லட்சுமி தேவி வழிபாட்டுக்குரிய தினமாக இருப்பதால், மற்ற எந்த கிழமைகளில் தூபம் இட வில்லை என்றாலும் கட்டாயம் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் தூபம் போட வேண்டும். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் செய்தாலே போதும். உங்கள் வீட்டில் எப்போதும் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. வீடு முழுக்க எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

வாரந்தோறும் வருகின்ற சனிக்கிழமைகளில் வீட்டில் தூபம் இடுவதால் வீட்டில் இருக்கின்ற நபர்களின் உடல் மற்றும் மனதளவில் இருக்கின்ற சோம்பல் குணம் நீங்கும். நீண்ட காலமாக இருக்கின்ற கஷ்ட நிலை மாறி நன்மையான பலன்கள் ஏற்படும். பைரவ மூர்த்தியின் பரிபூரணமான அருட்கடாட்சம் கிடைக்கும்.

- Advertisement -