துலாம் ராசியினருக்கான பொது பரிகாரங்கள்

- Advertisement -

இன்று உலகெங்கிலும் பல கோடி மக்கள் வாழ்கின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர்கள் வறுமை நிலையிலும் பொருளாதார ரீதியாக நடுத்தர நிலையிலும் தான் வாழ்கின்றனர். மறுபுறம் சிலர் மிகுந்த செல்வ செழிப்போடு, பல விதமான இன்பங்களை அனுபவித்த படி வாழ்கின்றனர். இதற்கு சமூக, பொருளாதார ரீதியான காரணங்களை நாம் குறை கூறினாலும், ஒரு மனிதன் இன்பமான அல்லது துன்பமான வாழ்க்கை வாழ்வதை அவன் பிறக்கும் ராசி, நேரம் கொண்டு அறியலாம் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் இன்பங்களையும், செல்வம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் கொண்ட “துலாம்” ராசியினர் பற்றியும், அவர்கள் வாழ்வில் சிறப்படைய செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் ராசி கட்டங்களில் ஏழாவதாக வரும் ராசி துலாம் ராசியாகும். இந்த ராசியின் அதிபதியாக இன்பங்களுக்கு காரகனான சுக்கிர பகவான் இருக்கிறார். துலாம் சுக்கிர பகவானின் ஆட்சி வீடு என்பதால் இந்த ராசியில் பிறக்கும் நபர்களின் குடும்பம் பெரும்பாலும் ஓரளவு வசதி படைத்த குடும்பமாகவே இருக்கும். இந்த ராசியில் பிறந்த ஆண் மற்றும் பெண்கள் நல்ல தோற்ற பொலிவோடு, பிறரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி தன்மையை கொண்டிருப்பார்கள். இத்தகைய துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் எப்போதும் சீரும், சிறப்புமாக வாழ கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்வதால் நன்மைகள் உண்டாக்கும்.

- Advertisement -

துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் லட்சுமி மற்றும் குபேரரின் படங்களுக்கு முன்பு சிறிது கற்கண்டுகளை நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி லட்சுமி குபேரர் மந்திரங்களை 108 முறை துதித்து வணங்க வேண்டும். பிறகு கோயிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கு மல்லிப்பூக்கள் சமர்ப்பித்து, சர்க்கரை, கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, நெய் தீபமேற்றி சுக்கிர பகவான் மந்திரங்களை துதித்து வணங்க வேண்டும். வருடமொருமுறை சுக்கிர பகவான் தலமான கஞ்சனூர் கோயிலுக்கு ஒரு வெள்ளி கிழமை தினத்தில் சென்று வழிபட வேண்டும்.

feeding birds

சுக்கிரன் பகவான் பெண்கள் மற்றும் விலங்குகள் மீது ஆதிக்கம் செலுத்தும் கிரகமாக இருக்கிறார் . எனவே வசதி குறைந்த பெண் குழந்தைகளுக்கு ஆடை மற்றும் இனிப்புகளை தானம் வழங்குவதாலும், பசுமாடுகள், நாய்கள், குரங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவு வழங்குவதிலும் சுக்கிர பகவானின் கருணையான பார்வை உங்கள் மீது பட்டு உங்களின் சுக்கிர தோஷத்தை நீக்கும். உங்கள் வீட்டு பெண்களையோ அல்லது மற்ற பெண்களையோ திட்டுவதோ, அடிப்பதோ, அவமானம் செய்வதையோ தவிர்ப்பதால் சுக்கிரனின் அருளும், லட்சுமி தேவியின் அருளாசிகளும் உங்களுக்கு கிடைத்து பொருளாதார ரீதியில் பல நன்மைகளை உண்டாக்கும். கோயில்கள், மடங்கள் போன்றவற்றிற்கு வெள்ளிக்கிழமையன்று வெள்ளை நிற வெண்ணை கட்டிகளையும், பசும்பாலையும் தானமளிப்பது நல்லது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thulam rasi pariharam in Tamil. It is also called Jothida rasi pariharam in Tamil or Thulam rasi in Tamil or Rasi pariharam in Tamil or Thulam rasi in Tamil.

- Advertisement -